வெள்ளிக்கிழமை, ஜனவரி 31, 2025

காதலை பகிரங்கமாக அறிவித்து விட்டு கெத்தாக பிரேக்கப் செய்த 6 நடிகைகள்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் பண்ணிய நயன்!

Nayanthara: பொதுவாக நடிகைகள் காதல் வயப்பட்டால் அதை வெளியில் சொல்ல மாட்டார்கள். இதற்கு காரணம் மார்க்கெட் குறைந்துவிடும் என்பதால்தான்.

இரு வீட்டார் சம்மதம் கிடைத்த உடன் தான் திருமண தேதியை நேரடியாக அறிவிப்பார்கள். ஒரு சில நடிகைகள் இதற்கு விதிவிலக்காகவும் இருக்கிறார்கள்.

அதாவது காதலில் விழுந்த உடனேயே அதை பகிரங்கமாக அறிவித்து விட்டார்கள். அதன் பின்னர் செட் ஆகாது என டாட்டா காட்டிவிட்டு வந்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஆறு நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

கெத்தாக பிரேக்கப் செய்த 6 நடிகைகள்

நயன்தாரா: நடிகை நயன்தாரா பிரபுதேவாவை காதலிப்பதை ஊரறிய அறிவித்தார். எல்லா விழாக்களுக்கும் அவருடன் தான் செல்வார்.

கையில் அவருடைய பெயரை பச்சை குத்திக் கொண்டார். கடைசியில் எதுவுமே செட்டாகாது என்று தெரிந்ததும் பிரபு என்ற பெயரை பாசிட்டிவிட்டி மாற்றிக் கொண்டு அந்த காதலில் இருந்து ஒதுங்கி விட்டார்.

த்ரிஷா: நடிகை திரிஷா தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்றது. அதன் பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டார்கள்.

சமந்தா: நடிகர் சித்தார்த் மற்றும் சமந்தா இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தார்கள்.

இதற்காக சமந்தா மதம் மாறியதாகவும் சொல்லப்பட்டது. திருமண தோஷம் இருப்பதால் இருவரும் கோவிலில் பூஜைகள் எல்லாம் கூட செய்தார்கள். அதன் பின்னர் இந்த ஜோடி பிரேக் அப் செய்து கொண்டது.

ஐஸ்வர்யா ராய்: ஐஸ்வர்யா ராய்- சல்மான் கான் ஜோடி இன்றுவரை பாலிவுட்டில் பிரபலம் தான்.

ஐஸ்வர்யா ஹிந்தியில் அறிமுக கதாநாயகியாக இருக்கும்போது சல்மான் கானின் காதலியாக பெரிய அளவில் அறியப்பட்டார். பின்னர் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

ஐஸ்வர்யா ராய் காதலில் இருந்து விலகிய பின்னரும், நீண்ட காலங்களாக சல்மான் கான் அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்தது செய்திகளிலேயே வெளியானது.

ராஷ்மிகா: நடிகை ராஷ்மிகா மந்தனா முதன் முதலில் அறிமுகமாகியது கன்னட படத்தில் தான். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரோகித் என்பவரையே காதலித்தார்.

இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.

ஸ்ருதி ஹாசன்: நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் நடிகர் சித்தார்த் இருவரும் காதலித்து வந்தார்கள். ஆறு மாதங்களுக்கு மேலாக லிவிங் டு கெதரில் இருந்து வந்தார்கள். இந்த நிலையில் இருவருக்கும் ஒரு மிகப்பெரிய சண்டை ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.

Trending News