Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், தன்னுடைய அண்ணனை விபத்து பண்ணியது மாறன் இல்லை, ராகவன் தான் என்ற உண்மை வள்ளி மூலம் வீராவுக்கு தெரிந்து விட்டது. அப்போதிலிருந்து மாறன் மீது இருந்த கோபம் போய்விட்டது. அதோடு மட்டுமில்லாமல் நான்தான் மற்றவர்களுக்காக சில தியாகங்களை பண்ணுவேன் என்று எல்லோரும் என்னை சொல்வார்கள்.
ஆனால் நீ என்னையே மிஞ்சும் அளவிற்கு ஒரு கொலை பழியை உன் மேலே போட்டு விட்டு உன் குடும்பத்தையும் அண்ணனையும் காப்பாற்றி இருக்கிறாய். உண்மையிலே நீ தான் சொக்கத்தங்கம் என்று மாறன் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது வீரா செண்டிமெண்டாக பேசி இனி உன்னை விட்டு நான் போகவும் மாட்டேன். நீதான் என்னுடைய புருஷன் என்று சொல்லி வீராவின் மனசில் இருக்கும் காதலையும் மாறன் தூங்கிக்கொண்டிருக்கும் போது வெளிப்படுத்தி விட்டார்.
அத்துடன் மாறன் மீது தொடர்ந்து கரிசனம் காட்டும் விதமாக மொத்த அன்பையும் மறைமுகமாக காட்டி வருகிறார். இதனால் வீராவின் பேச்சில் சில மாற்றங்கள் இருக்கிறது என்னவாக இருக்கும் என்று மாறனும் குழம்பிப் போய்விட்டார். மேலும் மாறனை யாரும் எதுவும் சொல்லாத அளவிற்கு பொக்கிஷமாக பாதுகாக்க ஆரம்பித்து விட்டார்.
அதனால் தான் மாறன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ராமச்சந்திரன் வந்து மாறனை திட்டிய பொழுது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாமனார் கூட என்று பார்க்காமல் நல்ல நாலு கேள்வி வீரா கேட்டு விட்டார். இதனால் இனி மாறன் பக்கமே அவர் வராதபடி வாயை மூடிக்கொண்டு ராமச்சந்திரன் போய்விட்டார்.
இதையெல்லாம் பார்த்த வள்ளி அத்தையும் ரொம்பவே சந்தோஷத்தில் வீராவை கொண்டாட ஆரம்பித்து விட்டார். ஆனால் இதற்கு இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கிறது கண்மணி தான். அதாவது மாறன் மீது எந்த தவறும் இல்லை இந்த கேசை மறுபடியும் துவங்கி மாறனை சிக்க வைக்க கண்மணி தான் பிளான் போட்டு வருகிறார் என்று வீராவுக்கு தெரிஞ்சு போச்சு.
அதனால் கண்மணி என்ன பண்ணாலும் அதற்கு முட்டுக்கட்டை போட்டு கண்மணி அடுத்து எதுவும் பண்ணாத படி ஒவ்வொரு விஷயங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அந்த வகையில் கண்மணி ஏற்பாடு பண்ணின போலீஸ் ராமச்சந்திரன் வீட்டிற்கு கண்மணி மற்றும் வீராவிடம் விசாரிக்க வந்துவிட்டார்.
ஆனால் அவரும் கண்மணி ஆள்தான் என்று வீராவுக்கு தெரிந்ததால் போலீசையும் நீ எது வேணாலும் செஞ்சு பாரு நாங்க பார்த்துக்கிடும் என்று தெனாவட்டாக சொல்லி மாறனுக்கு சப்போர்ட்டாக பேச ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் வீரா மாறனுக்கு சப்போர்ட் செய்யும் வரை இனி யாராலும் ஒன்னும் பண்ண முடியாது என்பதற்கு ஏற்ப இந்த கேசில் இருந்து மாறனை வீரா காப்பாற்றி விடுவார். அத்துடன் கண்மணியும் இதில் தோற்றுப் போய் நிற்கப் போகிறார்.