திங்கட்கிழமை, பிப்ரவரி 3, 2025

அஜித்துக்கு கொடுக்கப்பட்ட பத்ம பூஷன் விருது, சைலன்ட் மோடில் நடிகர் சங்கம்.. கொளுத்தி போட்ட யோகிபாபு

Ajith Kumar: நடிகர் யோகி பாபு சமீபத்தில் அஜித் குமார் பற்றி ஒரு விஷயத்தை கொளுத்திப் போட்டு இருக்கிறார். அஜித்திற்கு இந்த வருஷம் மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக பல துறையை சேர்ந்தவர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.

இன்னொரு பக்கம் அஜித்துக்கு இந்த விருது கொடுத்திருப்பது சில அரசியல் உள்நோக்கத்திற்காக தான் என பேசி வருகின்றார்கள்.

கொளுத்தி போட்ட யோகிபாபு

ஆனால் அஜித் எந்த விருது வேணா கொடுத்துட்டு போங்க நான் கார் ஓட்டி முடிச்சுட்டு வரேன்னு அவர் வேலையில் பிசியாக இருக்கிறார்.

அஜித்துக்கு விருது கொடுக்கப்பட்டதற்கு நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டது.

ஆனால் இது மட்டும் பத்தாது என்று நடிகர் யோகி பாபு கொளுத்தி போட்டு இருக்கிறார். அஜித்துக்கு பத்மபூஷன் விருது கொடுத்ததற்கு அவருக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

நடிகர் அஜித் மிகப் பெரிய சாதனையை செய்திருக்கிறார். அதற்காக எல்லோரும் அவரை பாராட்டியே ஆக வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதற்கு ஏற்றபடி யோகி பாபு கொளுத்தி போட்டது பாராட்டு விழாவாக மாறுகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News