செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 4, 2025

மூன்று முடிச்சு சீரியலில் சூர்யாவுக்கு கட்டம் கட்டிய நந்தினி.. மாமனார் போட்ட கணக்கில் தவிக்க போகும் சுந்தரவல்லி

Moondru Mudichu Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியலில், நந்தினி எதிர்பார்க்காத நேரத்தில் விருப்பமில்லாத தாலியை சூர்யா கட்டிவிட்டார். அதனால் அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் சூர்யாவின் மனைவி என்ற ஒரு போர்வைக்குள் சுந்தரவல்லி வீட்டிற்கு மருமகளாக நந்தினி போய்விட்டார்.

ஆனால் தகுதி தராதரம் பார்க்கும் சுந்தரவல்லிக்கு நந்தினியை மருமகளாக ஏற்றுக் கொள்ள மனமில்லை. அதனால் எப்படியாவது சூர்யாவின் வாழ்க்கையில் இருந்தும் வீட்டை விட்டும் துரத்த வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் சதி செய்து வருகிறார். இதில் சுந்தரவல்லி என்ன சதி செய்தாலும் நந்தினிக்கு பக்கபலமாக சூர்யா இருப்பதால் நந்தினிக்கு வரும் பிரச்சனையிலிருந்து சூர்யா காப்பாற்றி விடுகிறார்.

ஆனாலும் சூர்யா தொடர்ந்து குடிப்பழத்திற்கு அடிமையாகி அம்மாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தன்னை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறார் என புரிந்து கொண்ட நந்தினி இந்த வாழ்க்கையை விட்டு போக வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். போதாததற்கு சுந்தரவல்லி கொடுக்கும் டார்ச்சர் அனுபவிக்கும் நந்தினி சுதந்திர பறவையாக மறுபடியும் கிராமத்தில் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

அதனால் மாமனாரிடம் என்னை எங்க ஊருக்கு என்னுடைய குடும்பத்துடன் அனுப்பி வைத்து விடுங்கள் என்று கேட்கிறார். அதற்கு சூர்யாவின் அப்பா போட்ட கண்டிஷன் என்னவென்றால் நீ என்னுடைய மகனை குடி பழக்கத்தில் இருந்து மீட்டெடுத்து கொடு. அதன் பிறகு உன்னுடைய ஆசையை நான் நிறைவேற்றுகிறேன் என்று வேண்டுகோள் வைக்கிறார்.

உடனே நந்தினி கொஞ்சம் கூட யோசிக்காமல் நான் உங்க பையனை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்கிறேன். அப்படி உங்களுடைய பையனை திருப்பிக் கொடுத்த பிறகு என்னை எங்க ஊருக்கு அனுப்பி வைத்து விடுவீர்களா என்று கேட்கிறார். அப்பொழுது சூர்யாவின் அப்பா இப்போதைக்கு என் மகன் குடிப்பழக்கத்தில் இருந்து சரியாக வேண்டும்.

அப்படி சரியாகி விட்டால் நந்தினியை அவன் விடமாட்டான். பிறகு அவர்கள் இருவருடைய வாழ்க்கையே அவங்களை பார்த்துக் கொள்வார்கள், ஆனால் அதுவரை நந்தினி கேட்டபடி நான் சரி சொல்லலாம் என்று மனதிற்குள் பிளான் பண்ணிவிட்டு நந்தினியிடம் சரி என சம்மதம் கொடுத்து விடுகிறார். உடனே இது போதும் எனக்கு என்ற சந்தோசத்தில் நந்தினி, சூர்யாவை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று கட்டம் கட்டி விட்டார்.

அந்த வகையில் தினமும் காபி குடிக்கும் பொழுது சூர்யா அதில் மதுவை மிஸ் பண்ணி குடிப்பதும் தொடர்ந்து கையில் எடுத்துக் கொண்டு எல்லா பக்கமும் சுற்றுவதையும் நிறுத்த வேண்டும் என்பதற்காக எல்லா மதுவையும் கீழே ஊற்றி வருகிறார். இது எதையும் கண்டுபிடிக்க முடியாமல் சூர்யா சரக்கு காலியாகிவிட்டது என்று மறுபடியும் வெளிநாட்டு சரக்கை கேட்டு போன் பண்ணுகிறார்.

ஆனாலும் இதை தடுக்க வேண்டும் என்று நந்தினி மறுபடியும் பிளான் பண்ணி சூர்யாவை குடிக்க விடாமல் ஏமாற்றுவதற்கு முயற்சி எடுத்து வருகிறார். ஆனால் இது சூர்யாவுக்கு தெரிய வரும் பொழுது நிச்சயம் நந்தினி மீது கோபப்பட்டு சண்டை போடும் அளவிற்கு பூகமமாக வெடிக்க போகிறது. இருந்தாலும் நந்தினி எடுக்கும் முயற்சியில் நிச்சயம் அவருக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி சூர்யா குடிக்காமல் திருந்தி விட்டால் நந்தினி மற்றும் சூர்யாவுக்கு இடையே ஒரு நல்ல புரிதல் உண்டாகிவிடும். அதன் பிறகு நந்தினியை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று நினைக்கும் சுந்தரவல்லிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கப் போகிறது.

Trending News