செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 4, 2025

மீனாவின் தந்திரத்தால் நிம்மதியாக இருக்கப் போகும் முத்து.. தோற்றுப் போன விஜயா, சந்தோஷத்தில் குடும்பம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது போல் விஜயா, வீட்டுக்கு வந்த மருமகளிடம் பாரபட்சம் பார்க்கிறார். அதுவும் பணம் வசதி இருப்பதை பொறுத்து மருமகளிடம் நடந்து கொள்கிறார். அப்படி பணம் வசதி இருக்கிறது என்று சுருதி மற்றும் ரோகினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்.

ஆனால் மீனா வீட்டில் எதுவும் இல்லை மீனா படிக்கவும் இல்லை என்று ஏளனமாக நினைத்து மீனாவை வீட்டு வேலைக்காரியாக விஜயா நடத்தி வருகிறார். ஆனால் இதை கூட பொறுத்துக் கொள்ள முடியும் பெற்ற மகன்களுக்கு இடையே பாரபட்சம் பார்த்து முத்துவை ஏதோ வேண்டாத பிள்ளையாக நினைத்து அவமானப்படுத்தி வெறுத்து வருகிறார்.

அதனால் தான் ஒரே வீட்டில் அவங்களுக்கு மட்டும் தனியாக ரூம் எதுவுமில்லாமல் நடுவீட்டிற்குள் தூங்கும் நிலைமை ஏற்பட்டு விட்டது. இந்த நிலைமையை சரி செய்ய வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து மாடியில் ஒரு ரூம் கட்ட வேண்டும் என்று மீனா மற்றும் முத்து முயற்சி எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் முத்து கார் ஓட்டி வரும் பணத்தை சேர்த்து வைக்கிறார்.

அதே மாதிரி மீனாவும் பூக்கட்டி பணத்தை சேர்த்து வைத்த நிலையில் தற்போது டெக்கரேஷன் பண்ணும் அளவிற்கு கொஞ்சம் வளர்ச்சி அடைந்து விட்டார். அந்த வகையில் பெரிய ஆர்டர் ஒன்னு கையில் கிடைத்திருக்கிறது. அதை மட்டும் நல்லபடியாக முடித்து விட்டால் நிச்சயம் அதிக பணம் கிடைக்கும். அந்த பணத்தை வைத்து ரூம் கட்டுவதற்கு உதவியாக இருக்கும் என மீனா நினைத்து செயல்படுகிறார்.

ஆனால் தனக்கு போட்டியாக மீனா வருகிறார் என்று பொறாமையில் பொங்கியெழும் சிந்தாமணி, விஜயாவின் வீக்னஸ் பாயிண்டை புரிந்து கொண்டார். அதாவது விஜயாவுக்கு மீனா என்றால் பிடிக்காது என தெரிந்து கொண்ட சிந்தாமணி, விஜயாவிடம் உங்க மருமகளுக்கு வந்த ஆர்டர் பெரிய ஆர்டர். அதை மட்டும் செய்து விட்டால் உங்கள் மருமகளுக்கு கை நிறைய பணம் கிடைக்கும்.

அதன் பிறகு உங்களை மதிக்கவே மாட்டார் என விஜயாவின் மனசை கலைக்கும் அளவிற்கு சிந்தாமணி பேசிவிட்டார். உடனே வீட்டுக்கு போன விஜயா, மீனாவை டெக்ரேசன் பண்ணுவதற்கு மண்டபத்திற்கு போக விடாமல் தடுக்க வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார். அதற்காக கை வலிக்குது என்று ஆர்ப்பாட்டம் பண்ணி கத்தி அதற்கு பணிவிடை செய்யும் அளவிற்கு மீனாவை ஒரு வேலைக்காரியாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்.

மீனாவும், விஜயாவை இந்த நிலைமையில் விட்டு போகும் மனம் இல்லாமல் விஜயாவுக்கு ஒவ்வொரு விஷயங்களை செய்து கொண்டு வருகிறார். ஆனாலும் மண்டபத்தில் நடக்கும் டெகரேஷனை சரியான நேரத்தில் நன்றாக செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக வீடியோ காலில் மூலம் எப்படி பண்ண வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார்.

அதன்படி டெக்கரேஷன் நல்லபடியாக முடிந்து விட்ட நிலையில் மீனாவுக்கு வெற்றி கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்தில் அதை கொண்டாடுவதற்கு முத்து, மாலை கொண்டு வந்து மீனாவுக்கு மரியாதை செலுத்துகிறார். இதை பார்த்த குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் விஜயா மட்டும் நாம் போட்ட பிளானில் தோற்றுப் போய் விட்டோமே என்று வைத்தெரிச்சல் பட ஆரம்பித்து விட்டார்.

இதனை தொடர்ந்து முத்து மற்றும் மீனாவுக்கு ஒரு விடிவு காலம் பிறந்தாச்சு என்பதற்கு ஏற்ப இதில் கிடைக்கும் பணத்தை வைத்து ரூம் கட்டி சந்தோஷமாக வாழ போகிறார்கள்.

Trending News