செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 4, 2025

அட்வான்ஸ் புக்கிங்கில் அதிக டிக்கெட் விற்பனையான 5 படங்கள்.. அட! லிஸ்டுல ஒரே தமிழ் படம்தான் இருக்கு

Pushpa: படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அந்த படத்தின் சாட்டிலைட் வியாபாரம், டிஜிட்டல் வியாபாரம், அட்வான்ஸ் புக்கிங் என எல்லாமே கணக்கிடப்பட்டு முடிக்கப்படுகிறது.

இதிலிருந்து அந்த ஹீரோக்களின் செல்வாக்கும் கணக்கிடப்படுகிறது. அப்படி கடந்த வருடத்தில் முன்பதிவில் அதிக டிக்கெட் விற்பனையான ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.

லிஸ்டுல ஒரே தமிழ் படம்தான் இருக்கு

புஷ்பா: அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ரிலீசான புஷ்பா 2 படம் தென்னிந்தியாவின் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.

புஷ்பா படத்தின் முன்பதிவு போது 30 லட்சம் டிக்கெட் விற்பனையாகி முதல் இடத்தில் இருக்கிறது

லியோ: இந்த லிஸ்டில் இடம்பெற்றிருக்கும் ஒரே தமிழ் படம் லியோ தான்.

மாஸ்டருக்கு பிறகு லோகேஷ் தியாகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான படம் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. முன்பதிவு போது 22.86 லட்சம் டிக்கெட் விற்பனையாகின.

கல்கி: நடிகர்கள் பிரபாஸ், அமிதாப்பச்சன் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் உருவான படம் தான் கல்கி. விஷ்ணு அவதாரத்தை மையமாகக் கொண்டு இந்த படம் ரிலீஸ் ஆனது.

இதன் இரண்டாம் பாகமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் முன்பதிவு 17.26 லட்சம் டிக்கெட் விற்பனையாகி இருக்கிறது.

சலார்: சலார் திரைப்படம் நடிகர் பிரபாஸுக்கு எதிர் பார்த்த அளவுக்கான பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இருந்தாலும் முன்பதிவின்போது 16.69 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கிறது.

ஜவான்: அதல பாதாளத்தில் இருந்த பாலிவுட்டை மேலே தூக்கி வந்த பெருமை ஜவான் படத்திற்கு தான் உண்டு.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த இந்த படம் முன்பதிவின் போது 16.53 லட்சம் டிக்கெட் விற்பனையாகி இருக்கின்றன.

தேவரா: கடந்த வருடத்தில் ஜூனியர் என்டிஆருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் தான் தேவரா. டிக்கெட் முன்பதிவு என்பது கிட்டத்தட்ட 13.19 லட்சம் டிக்கெட் விற்பனையாகி இருக்கின்றன.

Trending News