செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 4, 2025

மீனாவை பழிவாங்க ரோகிணியின் அடுத்த அஸ்திவாரம்.. சத்யாவுக்கு செக் வைக்கும் சிட்டி, சிக்கலில் தவிக்கும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரவி மற்றும் சுருதி ஆசை ஆசையாக ஒரு வருட கல்யாண நாளை கொண்டாடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்கள். ஆனால் ரவி செய்த விஷயத்தை கண்ணால் பார்த்த சுருதி, ரவி மீது கோபப்பட்டு விவாகரத்து வாங்கும் அளவிற்கு போய்விட்டார்.

ஸ்ருதி எங்கே போயிருக்கிறார் என்று தெரியாமல் ரவி மண்டபத்தில் வரும் அனைவரையும் சமாளிக்க முடியாமல் திணறி போய்விட்டார். ஆனால் ரவியை இந்த சூழலில் இருந்து காப்பாற்ற வேண்டும் சுருதியை கண்டுபிடிக்க வேண்டும் என முத்து மற்றும் மீனா தேட ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் ஸ்ருதி விவாகரத்து விஷயமாக லாயர் ஆபீஸ்க்கு போயிருக்கிறார் என்று தெரிந்து விட்டது.

உடனே முத்து மற்றும் மீனா அங்கே ஸ்ருதிதை பார்த்து பேசுவதற்கு போய் விட்டார்கள். அங்கே மீனா பேசும் பொழுது சுருதி, ரவி என்னை ஏமாற்றி விட்டான். அவன் மீது இருந்த நம்பிக்கை எனக்கு போய்விட்டது. நம்பிக்கை இல்லாத இடத்தில் இதற்காக நான் இருக்க வேண்டும். பிறகு என்ன கணவன் மனைவி வாழ்க்கை வேண்டியது இருக்கு என்று கோபமாக பேசுகிறார்.

அப்பொழுது சுருதியின் நிலைமையை புரிந்து கொண்டு மீனா எந்த அளவுக்கு அட்வைஸ் கொடுக்க முடியுமோ அதை தெளிவாக கொடுத்து ஸ்ருதியின் தவறை சுட்டிக்காட்டி விட்டார். உடனே ஸ்ருதியும் அவர் செய்த தவறை புரிந்து கொண்டு மண்டபத்திற்கு வந்துவிட்டார். ஸ்ருதியை பார்த்த பிறகு தான் ரவிக்கும் உயிர் வந்தது போல் பெருமூச்சு விட்டார்.

பிறகு நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் ஆசைப்பட்ட மாதிரி ஒரு வருஷம் கல்யாணம் நாளை இரண்டு பேரும் சேர்ந்து கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இதில் முழுக்க முழுக்க முத்து மற்றும் மீனாவை கவுரவிக்கும் விதமாக ரவி மற்றும் சுருதி இரண்டு பேருமே முத்து மீனாவை பாராட்டி விட்டார்கள். இதனால் அங்கு இருந்த விஜயா மற்றும் ரோகினி கடுப்பாகி விட்டார்கள்.

இதனை தொடர்ந்து இந்த பங்க்ஷன் நல்லபடியாக முடிந்த நிலையில் ரோகிணி வித்யாவை கூட்டிட்டு சிட்டியை பார்த்து பேசுகிறார். அப்பொழுது ரோகிணி, சத்யாவின் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டது நான் தான் என்று முத்துவுக்கு என் மீது சந்தேகம் இருந்தது. ஆனால் எப்படியோ நான் அதிலிருந்து தப்பித்து விட்டேன். அடுத்ததாக முத்துவுக்கு உன் மீது தான் சந்தேகம் வரும். உன்னை தேடி வந்து விசாரிப்பான் கொஞ்சம் உஷாராக இருந்து கொள் என்று ரோகினி எச்சரிக்கை கொடுக்கிறார்.

அதற்கு சிட்டி அவருடைய முதல் சந்தேகமே என் மீது தான் இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு இருந்த சிட்டி ஆள் ஒருவர் ஆமாம் இதைப் பற்றி ஏற்கனவே சத்தியா என்னிடம் விசாரித்து போனதாக சொல்கிறார். உடனே சிட்டி, இந்த சத்யா என்ன கிரிமினல் வேலை பண்ணினான் என்ற ஒரு விஷயம் என்னிடம் இருக்கிறது. அதை மட்டும் நான் வெளியிட்டு விட்டால் அவன் வாழ்நாளில் வெளியே வர முடியாத படி ஜெயிலுக்குள் இருக்க வேண்டிய நிலைமை தான் என்று ரோகினிடம் சொல்கிறார்.

உடனே ரோகிணியும் மீனா மற்றும் முத்துவை பழிவாங்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று அடுத்த அஸ்திவாரத்தை கையில் எடுக்கும் விதமாக சிட்டியிடம் சத்யாவின் வீடியோவை வெளியிட்டு மாட்ட வைக்க சொல்லிவிட்டார். அதன்படி அந்த கிரிமினல் வேலையை பார்த்த விஷயத்திற்காக மறுபடியும் சத்தியா பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறார். இதனால் முத்து மற்றும் மீனா என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவிக்கப் போகிறார்கள்.

இவர்களுடைய தவிப்பே பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ளும் ரோகினி இது போதும் இனி இவர்கள் நம் விஷயத்தில் தலையிட மாட்டார்கள் என்று மறுபடியும் பொய்ப்பித்தலாட்டம் செய்து குடும்பத்தை ஏமாற்ற போகிறார். ஆக மொத்தத்தில் கடைசி வரை ரோகிணி மாட்டப் போவதில்லை.

Trending News