செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 4, 2025

பிரதீப் ரங்கநாதனை வைத்து ஸ்மார்ட்டா விளையாடிய ஏஜிஎஸ்.. டிராகனுக்கு கொட்டிய பணமழை

ஏஜிஎஸ், பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்ற படத்தை தயாரித்து வருகிறது. ஓ மை கடவுளே பட புகழ் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்பொழுது இந்த படத்தின் வியாபாரம் தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஒரே ஒரு படம் வெற்றி கொடுத்த பிரதிப் ரங்க நாதனை வைத்து இரண்டாவது படமே ஸ்மார்டாக வியாபாரம் செய்துள்ளது ஏஜிஎஸ் . இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாள்கள். கே எஸ் ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் என அனைவரும் நடித்திருக்கிறார்கள்.

டிராகன் படத்தின் டிஜிட்டல் உரிமையை netflix 14 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இந்தப் படத்தை உருவாக்க ஏஜிஎஸ் போட்ட பட்ஜெட்டை 15 கோடிகள் தான். அதுவும் போக சாட்டிலைட் 6 கோடிகளும், ஆடியோ 6 கோடிகளும் வியாபாரம் ஆகியுள்ளது.

இதை மட்டும் கணக்கு போட்டு பார்த்தாலே கிட்டத்தட்ட 27 கோடிகள் வந்துவிட்டது. இதன்பின் தியேட்டரில் ரிலீஸ் செய்த பின் வருகிற அனைத்தும் அவர்களுக்கு லாபம் தான். ஒரே ஒரு படம் வெற்றி கொடுத்ததன் மூலம் பிரதீப் ரங்கநாதன் எங்கேயோ போய்விட்டார்.

இந்தப் படத்தை இன்னும் ஓவர் சீஸ், அதாவது வெளிநாடுகளில் ரிலீஸ் செய்தால் இன்னமும் லாபம் தான். தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் இந்த படத்தை டிஸ்ட்ரிபியூஷன் செய்கிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய லாபம் பார்த்துள்ளது.

Trending News