Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலு மற்றும் சக்திவேல் போட்ட பிளான் என்னவென்றால் பாண்டியன் குடும்பத்தை சுக்கு நூறாக உடைக்க வேண்டும் என்றால் பாண்டியனின் மகள் அரசியை தன்னுடைய கஸ்டடிக்கு கொண்டுட்டு வர வேண்டும். அதன் மூலம் பாண்டியன் குடும்பம் ஒவ்வொரு நாளும் அவஸ்தைப்பட வேண்டும் என்று அரசிக்கு கங்கணம் கட்டி விட்டார்கள்.
அந்த வகையில் அரசியை காதலித்து வருவதாக குமரவேலு, அரசி பின்னாடி சுற்றி வந்தார். ஆனால் அரசி, குமரவேலு மற்றும் அவருடைய குடும்பம் கெட்டவர்களாகவும் சண்டைக்காரர்களாகவும் நினைத்ததால் விலகிப் போனார். இதனால் குமரவேலு, அரசி மனதில் இருக்கும் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தார்.
அதன்படி செந்தில் மற்றும் சக்திவேலுக்கு சண்டை வரும் பொழுது அதை தடுத்து விட்டு செந்திலுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக குமரவேலு பேசி விட்டார். இந்த விஷயத்தை செந்தில் எப்படியும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லுவார். அப்பொழுது அரசி அதைக் கேட்டுவிட்டு என் மீது இருக்கும் பயத்தையும் நான் கெட்டவன் என்கிற விஷயத்தையும் மறந்துவிட்டு என்னுடன் பழக ஆரம்பித்து விடுவார் என்று கணக்கு போட்டார்.
குமரவேலு போட்ட பிளான் படி செந்தில் வீட்டில் இருப்பவர்களிடம் சக்திவேலுக்கும் எனக்கும் சண்டை ஆரம்பித்தது. ஆனால் அதை நடக்காத படி குமரவேலு தடுத்து நமக்கு சப்போர்ட் ஆகவும் நம்மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லி சக்திவேலுவை கண்டித்து விட்டார் என கூறிவிட்டார். இதைக்கேட்ட அரசியும், குமரவேலு நல்லவர்தான் போல என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் அரசி வாசலில் நின்று கொண்டிருக்கும் பொழுது எதிர்க்க குமரவேலும் நின்றார். அப்பொழுது அரசி, குமரவேலுவை பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டார். இதுதான் முதல் படிக்கட்டு என்பதற்கு ஏற்ப குமரவேலுவும் அரசி மனசில் கொஞ்சம் நம் பிடித்து விட்டோம். இதை வைத்து படிப்படியாக அரசிடம் பேசி மொத்தமாக கவுத்து கல்யாணம் பண்ணி விட வேண்டும்.
அதன்பிறகு பாண்டியன் நம்முடைய கண்ட்ரோலுக்கு வந்து விடுவார் என குமரவேலு போட்ட பிளான் படி நடக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் செந்தில் மட்டும் குமரவேல் பற்றி எதுவும் உளராமல் இருந்திருந்தால் அரசி நிச்சயம் குமரவேல் பக்கம் போயிருக்க மாட்டார். இனி குமரவேலுவின் காதலில் அரசி சிக்கிக் கொள்ளப் போகிறார். இதனால் பாண்டியன் குடும்பம் குமரவேலு மற்றும் சக்திவேலுவிடம் மாட்டிக் கொண்டு ஒவ்வொரு நாளும் அவஸ்தைப்பட போகிறது.
இதற்கு இடையில் கதிர் ராஜியை எக்ஸாம் எழுதுவதற்கு கூட்டு போனார். அதன்படி ராஜி நல்லபடியாக எக்ஸாம் எழுதிவிட்டார். இதனை தொடர்ந்து இவர்களுடைய புரிதலும் நன்றாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது. இனி காதலுக்கும் ரொமான்ஸுக்கும் பஞ்சமே இல்லை என்பதற்கு ஏற்ப ராஜி மற்றும் கதிரின் காதல் டாப் கியரில் பறக்கப்போகிறது.