செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 4, 2025

சைலன்டா கூலி கேப்பில் லோகேஷ் செய்த வேலை.. எல் சி யுக்கு கொக்கி போட்டு தூக்கப்பட்ட தலக்கட்டு

லோகேஷ், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் பிசியாக இருக்கிறார். இதற்கிடையே அவருக்கு பழைய படம் ஒன்றை இயக்கி தருமாறு நெருக்கடி வந்துள்ளது. அதாவது கைதி இரண்டாம் பாகம் படத்தை எடுப்பதற்கு தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தரப்பில் இருந்து அவசரப்பட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே கமலின் விக்ரம் படம் எடுப்பதற்கு முன்பே அவர்கள் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துக் கொடுத்துவிட்டு போகுமாறு வலியுறுத்தினார்கள். இருந்தும் கூட அப்பொழுது அது நடக்கவில்லை. எஸ் ஆர் பிரபு பெருந்தன்மையாக விக்ரம் படத்தை முடித்துவிட்டு வருமாறு கூறிவிட்டார்

இப்பொழுது எஸ். ஆர் பிரபுவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சற்று டல்லாக உள்ளது. அதனால் கைதி போன்ற சின்ன பட்ஜெட் படங்களை எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். இதன் காரணமாகத்தான் அதன் இரண்டாம் பாகத்தையும் இப்பொழுது விரைவாக எடுக்க உள்ளனர்.

கூலி படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கைதி இரண்டாம் பாகத்தை தான் எடுக்க போகிறார். இதற்காக கிடைக்கின்ற நேரத்தில் சைலாண்டாக அந்தப் படத்தின் ப்ரீ ப்ரொடெக்ஷன் வேலைகளை பார்த்து வருகிறார். நடிகர் கார்த்தியும் இந்த படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகிறாராம்.

இதற்கிடையே லோகேஷ் நடிகர் கமலஹாசனுக்கு கூட தொலைபேசியில் அழைப்பு விடுத்து இந்த படத்தில் நடிப்பதற்கு கேட்டுள்ளார், அதற்கு கமலும் சம்மதித்துள்ளார். இதனால் கைதி இரண்டாம் பாகத்தில் எல் சி யூ வில் கமலை எதிர்பார்க்கலாம். வருகிற ஏப்ரலுக்கு பிறகு இந்த படத்தை தொடங்க உள்ளார் லோகேஷ்.

Trending News