புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

மகாநதி சீரியலில் நவீனை டார்ச்சர் பண்ணிய விஜய்க்கு திருப்பி அடிக்கும் கர்மா.. அவசர புத்தியால் காவிரி எடுத்த முடிவு

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரி குடும்பம் வீட்டை விட்டு கிளம்புகிறது என்று தெரிந்ததும் விஜய் என்னுடைய பொண்டாட்டியை எங்கே கூட்டு போகிறீர்கள். என்னுடைய அனுமதி இல்லாமல் என்னுடைய காவிரியை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது. காவிரியை நான் கூட்டிட்டு போகணும் என்று காவேரி குடும்பத்தில் இருப்பவர்களிடம் விஜய் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்.

ஆனால் காவேரி குடும்பம், விஜய் என்ன சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்து கூட கேட்க விரும்பவில்லை. அத்துடன் விஜய் மனதில் காவேரி வந்துவிட்டார் என்பதும் புரிந்து கொள்ளாமல் ஒப்பந்த கல்யாணத்தை மட்டுமே பேசி விஜய்யிடம் இருந்து காவிரியை பிரிப்பதற்கு முயற்சி எடுக்கிறார்கள். அதனால் விஜய்யை காவேரியிடம் பேச விடாமல் தடுக்கிறார்கள்.

காவிரி இதெல்லாம் பார்த்துக் கொண்டு எதுவும் பேச முடியாமல் அழுது கொண்டே பீல் பண்ணுகிறார். ஆனாலும் விஜய், அடாவடித்தனமாக காவிரி கையை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு கூட்டிட்டு போக பார்க்கிறார். அப்பொழுது குமரன், விஜயை தடுக்கிறார். இதனால் கொஞ்சம் பிரச்சனை ஆரம்பித்த நிலையில் நவீன் இரண்டு பேரையும் சமாதானப்படுத்த பார்க்கிறார்.

அப்பொழுது வீட்டிற்குள் இருந்த வெண்ணிலா விஜய் சத்தத்தை கேட்டதும் அங்கே வந்து விஜய் விஜய் என்று சொல்லி அவருடைய கையைப் பிடித்து விட்டு நிற்கிறார். இதை பார்த்ததும் காவிரி குடும்பத்தில் இருப்பவர்கள் உன்னுடைய ஆசை காதலி வந்துவிட்டால் போய் அவளுடன் குடும்பம் நடத்து எங்களை ஆளை விடு என்று சொல்லி வீட்டுக்குள் போய் விடுகிறார்கள்.

ஆனால் விஜய், காவிரியிடம் என்னைப் பற்றி தெரிந்தும் நீ ஏன் அமைதியாக இருக்கிறாய். உன் குடும்பத்தில் இருப்பவரிடம் சொல்லிட்டு என்னுடன் வா என்று கெஞ்சி கூப்பிடுகிறார். ஆனால் வெண்ணிலா விஜய் கையை பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் காவிரியும் எதுவும் பேசாமல் உள்ளே போய்விடுகிறார்.

பிறகு நவீன் மற்றும் விஜய் இருக்கும்பொழுது விஜய் என்னை பழி வாங்குவதற்கு ஒப்பந்த கல்யாணத்தைப் பற்றி போட்டுக் கொடுத்து விட்டாயா என்று நவீனை பார்த்து கேட்கிறார். அதற்கு நவீன் நான் அப்படிப்பட்டவனும் இல்லை அந்த கெட்ட புத்தியும் எனக்கு கிடையாது. நீ ஒப்பந்த கல்யாணத்தை பற்றி என்னிடம் சொல்லிய பொழுது காவிரியை என்னுடன் சேர்த்து வைக்கிறேன் என்று வாக்கு கொடுத்தாய்.

அதை நான் டைரியில் நோட் பண்ணி வைத்திருந்தேன், அதை யமுனா பார்த்து என்னையும் காவிரியும் வைத்து தவறாக பேசினாள். அதனால் வேறு வழியில்லாமல் நான் ஒப்பந்த கல்யாணத்தை பற்றி சொல்லிவிட்டேன். யமுனா அதை அவருடைய குடும்பத்தில் சொல்லி விட்டாள். ஆனால் உன் மனசிலும் காவிரி இருக்கிறாள் அதனால் தான் நான் இடைஞ்சலாக வரக்கூடாது என்று வலுக்கட்டாயமாக யமுனாவை என் தலையில் கட்டி வைத்தாய்.

அதை நான் புரிந்து கொண்டு உன்னுடைய வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தேன். ஆனால் நீ இப்பொழுது வெண்ணிலா வந்ததும் காவிரியை கழட்டி விட்டாய் என்று சொல்லி இதுதான் கர்மா திருப்பி அடிக்கிறது என்பதற்கு ஏற்ப விஜய் செய்த டார்ச்சர்க்கு சரியான பதிலடி கொடுத்து விட்டார். இதனால் கோபத்தில் வீட்டுக்குள் போன விஜய், தாத்தா பாட்டியிடம் நான் எவ்வளவு கூப்பிட்டும் காவிரி என்கூட வரவில்லை.

ஆனாலும் என்னை விட்டுப் போக மாட்டாள் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது வெண்ணிலா, விஜய் என்று மறுபடியும் விஜய் பக்கத்தில் நிற்கிறார். உடனே விஜய், வெண்ணிலாவிடம் நான் இப்பொழுது உன்னுடைய விஜய் கிடையாது. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது காவிரி தான் என்னுடைய மனைவி என்று சொல்லி புரிய வைக்கிறார்.

ஆனால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராகினி, வெண்ணிலாவே வைத்து விஜய் மனசை மாற்றி காவிரியை நிரந்தரமாக பிரித்து விடலாம் என்று பிளான் பண்ணி குறுக்கே புகுந்து காவேரி குடும்பத்தை பற்றி தவறாக பேசி விஜய் மனசை மாற்றப் பார்க்கிறார். ஆனால் விஜய்யிடம் அது எதுவும் செல்லுபடியாக என்பதற்கு ஏற்ப ராகினி, விஜய் இடம் நோஸ்கட் வாங்கி விட்டார்.

Trending News