புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

பாண்டியனின் மகனால் அவஸ்தைப்படும் மருமகள்.. லவ் ட்ராக்கில் சிக்கிக்கொண்ட அரசி, குழப்பத்தில் தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பிடிக்காத திருமணமாக இருந்தாலும் கல்யாணத்திற்கு பிறகு கணவன் மனைவிகள் எப்படி புரிதலுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக கதிர் மற்றும் ராஜியின் காதல் உணர வைக்கிறது. ராஜியின் ஆசையை தெரிந்து கொண்ட கதிர் குடும்பத்தை கண்டுகொள்ளாமல் ராஜியின் கனவை நிறைவேற்றும் விதமாக எக்ஸாம் எழுதுவதற்கு சென்னைக்கு கூட்டிட்டு போனார்.

அத்துடன் அதில் வெற்றி பெற்று வர வேண்டும் என்பதற்காக எல்லா உதவியும் பக்கத்தில் இருந்து ராஜியை ஊக்கப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ராஜி நல்லபடியாக எக்ஸாம் எழுதி முடித்து விட்டார். அதன்பிறகு ராஜி ஆசைப்பட்ட மாதிரி கடற்கரைக்கு கூட்டிட்டு போயி சந்தோசப்படுத்தி விட்டார். அத்துடன் நாம் இனி அடுத்த முறையும் இப்படி வரலாம் என்று கதிர் ராஜியிடம் சொல்கிறார்.

அந்த வகையில் இவர்களுடைய காதல் ஒன்று சேர போகிறது இனி சிறந்த கணவன் மனைவியாக கதிர் மற்றும் ராஜி நல்ல புரிதலுடன் மனம் ஒத்துப்போகும் தம்பதிகளாக வாழ போகிறார்கள். இதற்கிடையில் தங்கமயில் படிக்கவில்லை என்பது பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியாது. அதனால் தங்கமயிலை பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு வலுக்கட்டாயமாக வேலைக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

ஆனால் அந்த பள்ளியில் தங்கமயிலின் சர்டிபிகேட் வேண்டுமென்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பள்ளிக்கூடம் கூட ஒழுங்கா முடிக்கல இதுல எப்படி நம் சர்டிபிகேட் கொடுக்க முடியும் என்பதால் தங்கமயில் ஒவ்வொரு காரணங்களையும் சொல்லி ஸ்கூலில் ஏமாற்றிக் கொண்டு வந்தார். இதனால் அவர் பாண்டியனிடம் சீக்கிரத்தில் உங்க மருமகளை சர்டிபிகேட் கொடுக்க சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டார்.

உடனே பாண்டியன் வீட்டிற்கு வந்து தங்கமயிலிடம் நீ ஏன் இன்னும் சர்டிபிகேட் கொடுக்காமல் இருக்கிறாய். கொடுத்து விடு என்று சொல்லிய நிலையில் சர்டிபிகேட்டுக்கு என்ன பண்ணுவது என்று தெரியாமல் குழப்பத்தில் தவிக்கிறார். ஆனால் தனக்கு வேலைக்கு போக விருப்பமில்லை, வீட்டில் உள்ள வேலைகளை பார்த்துட்டு உங்களை கவனிப்பது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஏற்கனவே பலமுறை சரவணன் இடம் தங்கமயில் சொல்லி இருக்கிறார்.

ஆனால் சரவணன் எதைப் பற்றியும் யோசிக்காமல் அப்பா என்ன சொன்னாலும் அதை தலையாட்டிக் கொண்டு தங்கமயிலை டிலில் விட்டு விடுகிறார். இதனால் சரவணன் வைத்து ஒவ்வொரு நாளும் தங்கமயில் அவஸ்தையில் தத்தளிக்கிறார். இதற்கிடையில் குமரவேலு நினைத்தபடி அரசி அவருடைய காதல் வலையில் சிக்கிக் கொள்ளப் போகிறார். ஏனென்றால் செந்தில் சொன்னபடி குமரவேலு நல்லவர்தான் என்பது அவர் மனதில் தோன்ற ஆரம்பித்து விட்டது. இதனால் அரசி மற்றும் குமரவேலு லவ் ட்ராக் உண்டாகப் போகிறது.

Trending News