புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 6 படங்கள்.. கவனம் பெறுமா கேம் சேஞ்சர்.?

This Week OTT Release: இந்த வாரம் அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விடாமுயற்சி வர இருக்கிறது. நாளை ரிலீஸ் ஆகும் இப்படத்தின் பிரீ புக்கிங் அடுத்தடுத்த சாதனை படைத்து வருகிறது.

இதனால் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றியடைய வைக்க ரசிகர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். ஆனால் வழக்கம் போல சோசியல் மீடியாவில் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவதற்கு என்று ஒரு கூட்டம் இருக்கும்.

அதை விடாமுயற்சி தகர்க்குமா என நாளை பார்ப்போம். இது ஒரு பக்கம் இருக்க இந்த வாரம் ஓடிடியில் ஆறு முக்கிய படங்கள் வெளியாகிறது.

கவனம் பெறுமா கேம் சேஞ்சர்.?

அதன்படி இன்று ஹிந்தியில் வெளியான அனுஜா நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதேபோல் நாளை அமேசான் ப்ரைம் தளத்தில் தி ஆர்டர் இங்கிலீஷ் படமும் இன்வின்சிபிள் சீசன் 3 வெளியாகிறது.

பிப்ரவரி 7ம் தேதி பொங்கலுக்கு வெளியான மெட்ராஸ்காரன் ஆஹா தமிழ் மற்றும் சிம்ப்ளி சவுத் தளங்களில் வெளியாகிறது. அதேபோல் கடந்த 10ம் தேதி வெளியான கேம் சேஞ்சர் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.

தியேட்டரில் மொக்கை வாங்கிய இப்படம் டிஜிட்டலில் கவனம் பெறுமா என பார்ப்போம். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 8ம் தேதி ஆங்கில படமான ஸ்பென்சர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

இப்படியாக இந்த வார இறுதியை மேற்கண்ட படங்களோடு என்ஜாய் செய்யுங்கள். அடுத்த வாரம் பல தமிழ் படங்கள் டிஜிட்டலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News