வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

சிங்கப்பெண்ணில் வார்டனை நேரில் பார்த்த பார்வதி, வசமாய் மாட்டிய தில்லைநாதன்.. பிரளயமே உருவாயிடுச்சே!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகியிருக்கிறது.

மகேஷ் அப்பா அம்மாவை மீறி வார்டனுடன் ஆனந்தியின் வீட்டுக்கு பெண் கேட்டு சென்றது மகேஷின் அம்மா பார்வதிக்கு உச்சகட்ட கோபத்தை உண்டு பண்ணுகிறது.

அதுவும் கம்பெனிக்கு மகேஷுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரும்போது ஆனந்தியை அங்கே பார்த்த பிறகு கோபம் எல்லை மீறுகிறது.

தன்னுடைய மகனுக்கு பெண் கேட்க போக வார்டனுக்கு என்ன உரிமை இருக்கிறது என பார்வதி கோபம் நியாயமாக இருக்கிறது.

வசமாய் மாட்டிய தில்லைநாதன்

இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் வார்டனை பார்ப்பதற்கு பார்வதி ஹாஸ்டலுக்கே போகிறார். வார்டனை நேரில் பார்த்ததும் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

வீட்டிற்கு வந்து தில்லைநாதனிடம் ருத்ர தாண்டவம் ஆடுகிறார். எல்லோரும் ஒண்ணா சந்தோஷமா தான் இருக்கீங்க போல என கோபமாக கேட்கிறார்.

தில்லைநாதன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திக்கு முக்காடி விழித்துப் போகிறார். பார்வதியின் இந்த கேள்வியில் இருந்தே வார்டன் யார் என்பது பார்வதிக்கு தெரியும் என்பது நன்றாக தெரிகிறது.

அதே நேரத்தில் பார்வதி- வார்டன்- தில்லைநாதன் மூன்று பேருக்கு நடுவே ஒரு மிகப்பெரிய ஃப்ளாஷ்பாக் ஒளிந்து கிடக்கிறது என்பதும் தெரிகிறது.

இனிவரும் எபிசோடுகளில் வார்டன் யார், தில்லை நாதனுக்கும் அவருக்கும் இடையே என்ன உறவு என்பது நேயர்களுக்கு தெரிய வர ஆரம்பிக்கும்.

இந்த பிளாஷ்பேக் முடிந்த பிறகு தான் கல்யாண எபிசோடுகள் பரபரப்பாக ஆரம்பிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News