வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

அஜித் படம் பிப்ரவரியில் ரிலீஸ் ஆனா பிளாப் ஆயிடுமா!. ஆத்தாடி 7 படமும் அடி வாங்கி இருக்கே!

Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்திற்காக அஜித் ரசிகர்கள் இரண்டு வருடமாய் தவமாய் தவம் கிடந்து இருக்கிறார்கள்.

நாளை இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அஜித்குமாரின் பிப்ரவரி சென்டிமென்ட் என புதுசாக ஒரு விஷயம் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

அஜித் நடித்து பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன படங்கள் தோல்வி அடைந்தது இருப்பதாக 7 படங்களின் லிஸ்டை வைரல் ஆக்கி வருகிறார்கள். அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

பிப்ரவரியில் ரிலீஸ் ஆனா பிளாப் ஆயிடுமா!

பாசமலர்கள்: அரவிந்த்சாமி மற்றும் ரேவதியுடன் அஜித் இணைந்த நடித்த படம் தான் பாசமலர்கள். இந்த படம் 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி ரிலீஸ் ஆனது.

இப்படி ஒரு படம் அஜித் நடிப்பில் வெளியாகி இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை.

உன்னை தேடி: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அஜித் மற்றும் மாளவிகா நடிப்பில் வெளியான படம் தான் உன்னை தேடி. இந்த படம் கடந்த 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீசானது.

முகவரி: அஜித் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த முகவரி படம் 2000ம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் அஜித்துக்கு பெரிய அளவில் சக்சஸ் ஆகவில்லை.

கல்லூரி வாசல்: அஜித் மற்றும் பிரசாந்த் நடித்து 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தான் கல்லூரி வாசல். இந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

அசல்: அஜித் குமாரின் சினிமா கேரியரில் பெரியளவு தோல்வியை சந்தித்த படம் அசல். இந்த படம் 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது.

ஜீ: 2005ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் ரிலீசான படம் ஜீ. இந்த படம் அஜித்துக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.

வலிமை: எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி ரிலீசான படம் தான் வலிமை. இந்த படம் விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்தது.

Trending News