Vidaamuyarchi Movie Review: அஜித், மகிழ் திருமேனி கூட்டணியில் விடாமுயற்சி இரண்டு வருடங்களுக்கும் மேலாக உருவாகி வந்தது. பொங்கலுக்கு வர வேண்டிய இப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.
இதற்காகவே காத்திருந்த அஜித்தின் ரசிகர்கள் தற்போது தியேட்டர்களை தெறிக்க விடுகின்றனர். திருவிழா போல் ஆரவாரப்படுத்தி தங்கள் மகிழ்ச்சியை காட்டி வருகின்றனர்.
இப்படி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் எப்படி இருக்கு என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.
அன்பான கணவன் மனைவியாக இருக்கும் அஜித் திரிஷா இருவரும் காரில் லாங் ட்ரிப் செல்கின்றனர். அப்போது பாலைவனம் பகுதியில் கார் பிரேக் டவுன் ஆகி நின்றுவிடுகிறது.
அப்போது அந்த வழியாக வரும் அர்ஜுன் அவர்களுக்கு உதவி செய்ய முன் வருகிறார். அஜித் அவருடைய காரில் திரிஷாவை அனுப்பி வைக்கிறார்.
ஆனால் மீண்டும் அர்ஜுன் தன்னை அழைத்துச் செல்ல வருவார் என காத்திருக்கும் அஜித்துக்கு ஏமாற்றம்தான் கிடைக்கிறது. திரிஷா என்ன ஆனார்? அவரை தேடிச்செல்லும் அஜித்துக்கு ஏற்பட்ட நிலை என்ன? இதிலிருந்து அவர் மீண்டாரா? என்பது தான் படத்தின் கதை.
விடாமுயற்சி தரிசனம் எப்படி இருக்கு.?
இப்படம் ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று கூறப்பட்டது. ஆனால் கதை கரு ஒன்றாக இருந்தாலும் படத்தைப் பார்க்கும்போது ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கிறது.
திரைக்கதையை பொருத்தவரையில் இயக்குனர் ஸ்கோர் செய்திருக்கிறார். ஸ்டைலாக காட்சிப்படுத்திய விதமும் ஆக்ஷன் காட்சிகளும் மிரட்டல்.
இதில் அஜித்துக்கு எந்த மாஸ் காட்சிகளும் கிடையாது. கதையோடு பயணிக்கும் ஹீரோவாக அவர் பின்னி பெடல் எடுத்துள்ளார்.
அதிலும் திரிஷா அஜித் இருவரின் பிளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைத்திருக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் திரிஷா தான் மொத்த பிரச்சனைக்கும் காரணமாக இருக்கிறார்.
அவரால்தான் படத்தில் அடுத்தடுத்த திருப்புமுனைகள் வருகிறது. அதிலும் இடைவேளை காட்சியில் இருக்கும் ட்விஸ்ட் யாரும் எதிர்பாராதது.
இவர்களுக்கு அடுத்தபடியாக அர்ஜூன் ஆரவ் ரெஜினா ஆகியோரின் கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கிறது. அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் உள்ளது அவர்களின் நடிப்பு.
இப்படி படத்தில் பல நிறைகள் இருந்தாலும் முதல் பாதி இரண்டாம் பாதியை விட கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவாக இருக்கிறது. சில இடங்களில் காட்சிகள் மெதுவாக நகர்கிறது.
இதையெல்லாம் தவிர்த்து விட்டு பார்த்தால் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி தான். நிச்சயம் படத்தை பார்ப்பவர்களுக்கு இப்படம் நல்ல அனுபவமாக இருக்கும்.
சினிமா பேட்டை ரேட்டிங் : 3.75/5