வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

ஒத்த சீரியலால் மொத்தமும் டேமேஜ் ஆன விஜய் டிவி.. கதாநாயகனுக்கு எதிராக போர் கொடியை தூக்கிய ஆடியன்ஸ்

Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் சீரியலையும் தவிர்த்து, திறமைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சிகள், மக்களை பொழுதுபோக்காக வைக்கும் காமெடியான நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என பல்வேறு ஷோக்கள் நடைபெறுவதால் விஜய் டிவிக்கு ரசிகர்கள் கிடைத்துவிட்டார்கள்.

ஆனால் சமீப காலமாக ரியாலிட்டி ஷோக்கள் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சீரியலின் கதையும் பார்ப்பவர்களை கடுப்பேற்றும் விதமாக இருப்பதால் கமெண்ட்ஸ் மூலம் மக்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் பாக்கியலட்சுமி சீரியல் கதையே இல்லாவிட்டாலும் ஏதோ பார்ப்பதற்கு காமெடியாகவும் சில விஷயங்களை சகித்துக்கொள்ளும் அளவிற்கு இருப்பதால் ஓரளவுக்கு போய்க்கொண்டிருக்கிறது.

ஆனாலும் இந்த நாடகத்தை முடித்து விடுங்கள் என்று மக்கள் கதறி கொண்டு வருகிறார்கள். தற்போது இந்த நாடகத்தை தொடர்ந்து இன்னொரு சீரியலின் கதையும் மக்களின் மொத்த வெறுப்பையும் சம்பாதித்து விட்டு விஜய் டிவி சேனலை டேமேஜ் பண்ணிவிட்டது என்று இந்த நாடகத்திற்கு எதிராக போர் கொடியை தூக்கிட்டு வருகிறார்கள்.

அந்த நாடகம் சிறகடிக்கும் ஆசை சீரியல். இதில் ஆரம்பத்தில் எதார்த்தமான கதையும் குடும்பங்கள் கொண்டாடும் விதமாக காட்சிகளும் இருந்திருந்தாலும் தற்போது பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி ஒரு வாழ்க்கை தக்க வைத்துக் கொள்ளவும் முடியும். நேர்மையாக இருந்தால் அவர்களுக்கு தொடர்ந்து கஷ்டங்களும் பிரச்சனைகளையும் வந்து முட்டாளாக்கவும் வழி வகுக்கும் அளவிற்கு தான் கதை போய்க்கொண்டிருக்கிறது.

அதாவது ரோகினி அவருடைய வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பொய் சொல்லி கல்யாணம் பண்ணிட்டு வந்து தற்போது புகுந்த வீட்டில் இருப்பவர்களை மொத்தமாக ஏமாற்றி மற்றவர்களை பலியாடாக சிக்கவைத்து வருகிறார். சொல்ல முடியாத அளவிற்கு ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைகளை பார்த்து வருகிறார். ஆனால் அப்படிப்பட்ட இவர் எதிலும் சிக்காமல் மீனா மற்றும் முத்துவை பழி வாங்குவதற்கு ஒவ்வொரு விஷயத்திலும் சிக்கவைத்து வருகிறார்.

அந்த வகையில் ரோகிணி இதுவரை செய்த தில்லாலங்கடி பற்றி ஒரு சின்ன லிஸ்ட் போட வேண்டும் என்றால் முதலில் ஏற்கனவே கல்யாணமாகி இருக்கிறது என்ற விஷயத்தை மறைத்திருக்கிறார். அத்துடன் ஒரு குழந்தையும் இருக்கிறது அந்த குழந்தை ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கிறது என்பதும் யாருக்கு தெரியாது. மேலும் பணக்கார வீட்டுப் பொண்ணு இல்லை அவங்க அப்பா மலேசியாவிலும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் அப்பாவே கிடையாது அம்மா மட்டும்தான். சொந்தமான பார்லர் கிடையாது அதில் ஒரு வேலை பார்க்கும் ஊழியர் தான், சிட்டியுடன் சேர்ந்து கொண்டு முத்துவின் குடும்பத்தை ஏமாற்றி வருகிறார். விஜயாவின் பணத்தை திருடியது ரோகிணி தான் ஆனால் அந்த பழியை சுமந்தது மீனா. இப்படி ரோகிணி செய்த தில்லாலங்கடி வேலையை சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு எக்கச்சக்கமாக இருக்கிறது.

ஆனாலும் இதையெல்லாம் தாண்டி மீனா தற்போது சொந்தக்காலில் நிற்கும் விதமாக பூ டெக்ரேசன் பண்ணுவதற்கு ஒரு ஆர்டர் கிடைத்திருக்கிறது. இதை தடுக்கும் விதமாக சிந்தாமணி, விஜயா மூலம் காய் நகர்த்துகிறார். அதைக் கேட்டு விஜயா வீட்டுக்கு வந்து நீ என்னை பற்றி வெளியே எல்லாரிடமும் தவறாக சொல்லி இருக்கிறாய். பூக்கட்டி சம்பாதிக்கிறோம் என்ற திமிர் இருக்கிறதா உனக்கு என்று வாய்க்கு வந்தபடி குடும்பத்தில் இருப்பவர்கள் முன்னாடி மீனாவை தரக்குறைவாக பேசுகிறார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ரோகிணி சந்தோஷப்பட்டுக் கொள்கிறார். உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்றால் இந்த உலகத்தில் வாழ முடியாது என்பதற்கு தவறான எடுத்துக்காட்டாக இந்த சீரியல் போய் கொண்டு இருக்கிறது. அதற்கு பதிலாக தன்னுடைய சந்தோஷத்திற்காக மற்றவர்களை எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப்படைக்கலாம் என்பதற்கு ரோகிணியே உதாரணமாக காட்டிட்டு வருவது விஜய் டிவி சேனலையே டேமேஜ் பண்ணும் அளவிற்கு பார்க்கும் மக்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

இதில் கதாநாயகனாக நடித்த வெற்றி என்கிற முத்துவுக்கு மக்கள் சப்போர்ட்டாக இருந்தாலும் அவருக்கு ஏற்ற கதை இது இல்ல. சிறந்த காட்சிகள் கொடுத்து அவருடைய திறமையை காட்டவும் என்பதற்கு ஏற்ப போர் கொடி தூக்கி வருகிறார்கள். கடைசியில் எல்லா தவறுகளையும் செய்துவிட்டு மன்னிப்பு என்று சொல்லி முதலை கண்ணீர் வடித்து ரோகிணி திருந்துவது போல் காட்சி அமைத்து முடிப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்று மக்கள் கமெண்ட்ஸ் மூலம் கேட்டு வருகின்றார்கள்.

Trending News