Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவை பார்த்து பேசினால் எல்லாம் சரி பண்ணி விடலாம் என்ற நம்பிக்கையில் கோபி, ராதிகாவை தேடி அவருடைய புது வீட்டுக்கு போகிறார். அங்கே ராதிகாவின் அம்மா கமலா, நீங்க ஏன் இங்கே வந்தீங்க என் பொண்ணு தான் உங்களை இங்கே வரக்கூடாதுன்னு சொல்லி இருக்காளா என்று சொல்கிறார்.
அதற்கு கோபி நான் ராதிகாவை பார்த்து பேச வேண்டும் என்று வீட்டுக்குள் நுழைந்து ராதிகா என கூப்பிடுகிறார். பிறகு யாருமே இல்லை என்றதும் மாமியாரிடம் ராதிகாவும் மயுவும் எங்கே என கேட்கிறார். அதற்கு ராதிகாவின் அம்மா அவர்கள் என்னிடம் சொல்லாமல் வீட்டை விட்டு காலி பண்ணி போய் விட்டார்கள். எங்கே போனார்கள் என்று எனக்கு கூட தெரியாது.
நானும் இந்த வீட்டை காலி பண்ணி என்னுடைய பையன் கூடவே இருக்க போகிறேன் என்று சொல்லி கோபியை திருப்பி அனுப்பி விடுகிறார். அடுத்ததாக ராதிகா மற்றும் மயுவும் கடற்கரையில் இருக்கிறார்கள். அப்பொழுது ராதிகா, என் மீது ஏதாவது உனக்கு வருத்தம் இருக்கிறதா? நீ மனசுல என்ன நினைக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு மயூ நீங்க என்ன பண்ணினாலும் என்னுடைய நல்லதுக்காக தான் பண்ணுவீங்க என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
என்னைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், எனக்கு உங்களை நினைத்தால் தான் கஷ்டமாக இருக்கிறது என்று சொல்கிறார். அதற்கு ராதிகா எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என்னுடைய நோக்கம் எல்லாம் உன்னை நல்லபடியாக வளர்த்து காட்டனும் என்பதுதான். நான் சரியாக செய்வேன் என்று நான் முழுமையாக நம்புகிறேன், உனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு தானே என்று கேட்கிறார்.
அதற்கு மயூ ஆமாம் என்று சொல்லிய நிலையில் நாம் இந்த ஊரை விட்டு கிளம்பிடலாமா என்று கேட்கிறார். அதற்கு மயூ ஓகே என்று சொல்லிவிடுகிறார். இதனை தொடர்ந்து கோபி, ராதிகா எங்கே போனார் என்று தெரியாமல் வீட்டிற்குள் வருத்தத்துடன் வருகிறார். இதற்கிடையில் பாக்கியா இருக்கும் பொழுது கோபி பெயரில் ஒரு லெட்டர் வருகிறது. அதை வாங்கி வைத்த பாக்கியா, கோபி வந்ததும் அவரிடம் கொடுக்கிறார்.
ஆனால் கோபி அது என்னது என்று கூட பார்க்காமல் டேபிளில் போட்டு ராதிகாவை நினைத்து வருத்தமாக உட்கார்ந்து இருக்கிறார். அப்பொழுது ஈஸ்வரி, என்னாச்சு ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்ட பொழுது ராதிகாபை தேடி நான் வீட்டுக்கு போனேன் ஆனால் அவள் அங்கே இல்லை என்னை விட்டு எங்கே போய்விட்டார் என்று சொல்கிறார்.
இதை கேட்டதும் ஈஸ்வரி உன்னை விட்டு தொலைந்தது சனியன் என்று நினைத்து சந்தோஷமாக இரு. இனி உன்னை வேண்டாம் என்று சொல்லிட்டு போன அவளை பற்றி நீ யோசித்து கவலைப்படாதே. உனக்காக நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் என்று ஆறுதல் படுத்துகிறார். அப்பொழுது டேபிளில் இருந்த கவரை பார்த்த இனியா இது என்ன கவர் கோர்ட்டில் இருந்து வந்திருக்கிறது என்று கேட்கிறார்.
உடனே அந்த லெட்டர் வாங்கி பார்த்த கோபிக்கு அதிர்ச்சியான ஒரு விஷயம் ராதிகா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் என்று. இதை எதிர்பார்க்காத கோபி மொத்தமாக உடைந்து போய்விட்டார். அத்துடன் இந்த விஷயம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்த நிலையில் அனைவருமே அதிர்ச்சியாகி விட்டார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கோபி நெஞ்சை பிடித்துக் கொண்டு மறுபடியும் உக்காந்து விட்டார்.
எல்லாத்துக்கும் காரணம் ஒருவகையில் ஈஸ்வரி தான் என்றாலும் தற்போது இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு ஏற்ப மொத்த பழியையும் ராதிகா மீது போட்டுவிட்டு வாய்க்கு வந்தபடி திட்டுகிறார். எதுவுமே தெரியாத பாக்யாவை மட்டம் தட்டி பேசி பாக்யாவிற்கு தெரியாமலேயே விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து வாங்கி பெரிய துரோகத்தை பாக்யாவிற்கு கோபி பண்ணினார். தற்போது கோபிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராதிகா, நீ எனக்கு தேவையில்லை என்று கோபி முகத்தில் விவாகரத்து நோட்டீசை தூக்கி எறிந்து விட்டார். இதுதான் கர்மா ரிட்டன் என்று சொல்வார்கள்.