Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், கண்டிப்புடன் இருக்கும் அப்பாவின் கேரக்டரையும் எடுத்துரைக்கும் விதமாக இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் இதில் இருக்கும் பிரச்சனைகளையும் சிக்கல்களையும் சமாளிக்கும் விதமாக சில விஷயங்கள் அமைந்திருக்கிறது.
அதாவது கல்யாணத்திற்கு பிறகு அப்பாவிடம் எல்லாத்துக்கும் பெர்மிஷன் கேட்டு நிற்க முடியாது. ஒரு கட்டத்திற்கு பிறகு எங்களாலையும் யோசித்து, எங்களுக்கு என்ன தேவை எப்படி இருக்கணும் என்று தெரியும். அதன்படி போவதற்கு எந்தவித முட்டுக்கட்டையும் போடக்கூடாது என்பதற்கு ஏற்ப தான் செந்தில் மற்றும் கதரின் ஏக்கமாக இருக்கிறது.
அதிலும் செந்தில் ஏகப்பட்ட வருத்தங்கள் இருந்தாலும் அதை மனதிற்குள் வைத்துக்கொண்டு அப்பாவை எதிர்த்து பேசாமல் சகித்துக் கொண்டு வாழ்கிறார். ஆனால் கதிர் நான் இப்படித்தான் இருப்பேன், என் மனதில் பட்டதை நான் செய்வேன். யாருக்காகவும் எதற்காகவும் என்னை மாற்றிக்கொள்ள முடியாது என்பதற்கு ஏற்ப இருப்பதால் ராஜியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக போலீஸ் எக்ஸாம் எழுதுவதற்கு கூட்டிட்டு போய்விட்டார்.
இது பாண்டியனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ராஜி எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணிவிட்டால் ஒட்டுமொத்த குடும்பமும் தூக்கி கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள் என்று நினைப்பில் கதிர் அவருக்கு தோன்றிய விஷயங்களை பண்ண ஆரம்பித்து விட்டார். என்ன இருந்தாலும் இது இவருடைய குடும்பம் இன்னைக்கு சண்டை வந்தாலும் நாளைக்கு சரியாகிவிடும் என்பதற்கு ஏற்ப ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் இந்த குடும்பத்தையே ஆட்டிப்படைக்கும் விதமாக சக்திவேல் சதி செய்து வருகிறார். அந்த வகையில் குமரவேலுவை வைத்து அரசி மனதில் இடம் பிடித்து அரசியை கல்யாணம் பண்ணி விட்டால் பாண்டியன் நம் கைக்குள் அடக்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு ஏற்ப காய் நகர்த்தி வருகிறார்கள். அதில் குமரவேலு விரித்த வலையில் அரசி சிக்கிக்கொண்டார்.
குமரவேலுவின் உண்மையான முகம் தெரியாமல் செந்தில், வீட்டில் இருப்பவர்களிடம் குமரவேலு பற்றி சில நல்ல விஷயங்கள் சொல்லியதால் அரசி மனதில் குமரவேலு பற்றி நல்ல அபிப்பிராயம் வந்துவிட்டது. இதை புரிந்து கொண்ட குமரவேலு தொடர்ந்து அரசி மனசில் இடம் பிடிக்கும் விதமாக கொஞ்சம் கொஞ்சமாக பேசி காதலிக்க ஆரம்பித்து கல்யாணம் வரைக்கும் போய்விடுவார்.
குமரவேலுவை பற்றி சரியாக தெரியாமல் மக்காக இருக்கும் அரசியும் காதலில் விழுந்து பாண்டியனுக்கு எதிராக குமரவேலுவை கல்யாணம் பண்ணி ஏமாறப்போகிறார். அடுத்ததாக படிக்காமலேயே ஸ்கூல் வேலைக்கு போயிட்டு வரும் தங்கமயில் சர்டிபிகேட் இல்லை என்று சொல்ல தைரியம் இல்லாமல் கிடைத்துவிட்டது என்று சொல்லி அனைவரையும் நம்ப வைத்து விடுகிறார்.
அத்துடன் இந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை இதற்கு பதிலாக எனக்கு பிடித்த வேலையை நான் பார்க்கிறேன். அதற்கு எனக்கு கொஞ்சம் டைம் எனும் என்று சொல்லி பாண்டியன் குடும்பத்திடம் இருந்து பெர்மிஷன் வாங்கிக் கொண்டார். இனி கொஞ்ச நாளைக்கு சர்டிபிகேட்டுக்கும், வேலைக்கு போவதையும் நினைத்து பயப்படத் தேவையில்லை. இந்த பிரச்சனையில் இருந்து தங்கமயில் கொஞ்சம் எஸ்கேப் ஆகிவிட்டார்.