Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரனுக்கு குணமே இல்லை ஞானசேகத்திற்கு ஞானம் கொஞ்சம் கூட கிடையாது, சக்திக்கு சக்தியே இல்லை என்பதற்கு ஏற்ப மூன்று பேரும் மூன்று துருவங்களாக திரிகிறார்கள். இதில் கதிர் சொந்த புத்தியும் இல்லாமல் சுய புத்தியும் இல்லாமல் மாமனார் பேச்சை கேட்டுக் கொண்டு மல்லுவேட்டி மைனரிலிருந்து தற்போது அடாவடி பண்ணும் கதிராக மாறி இருக்கிறார்.
இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு முன்னேற துடிக்கும் நான்கு மருமகளின் பாடு பெரிய பாடாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இதையெல்லாம் பெரிசாக எடுத்துக் கொள்ளாத நந்தினி வாழ்க்கையில் தற்போது ஒளிவட்டம் தெரிவது போல் மிளகாய் பொடி பிசினஸ் முதல் ஆர்டரை கைப்பற்றி இருக்கிறார். இது நிச்சயம் நந்தினிக்கு கிடைத்த வெற்றி ஆகத்தான் பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஞானம் வழக்கம் போல் கையில் பணத்தை வைத்துக்கொண்டு ஏதாவது பிசினஸ் பண்ண வேண்டும் என்று கரிகாலனை நம்பிக்கொண்டு ஊர் சுற்றுகிறார். இதில் ஐஸ்வர்யா எஜுகேஷனல் டூர் போக வேண்டும் என்று பணம் கேட்டதற்கு ரேணுகாவிடம் அப்போதைக்கு பணம் இல்லை என்று ஞானம் வைத்திருந்த பணத்திலிருந்து எடுக்க போனார்.
ஆனால் எப்படி நீ என்னுடைய பணத்தில் கை வைக்கலாம் என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஞானம் புத்தியே இல்லாத அளவிற்கு மகளுக்காக தானே என்று கூட யோசிக்காமல் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டு போய்விட்டார். ஆனாலும் இந்த ஞானத்தை வைத்து ஒண்ணுமே பண்ண முடியாது என்று பீல் பண்ணும் ரேணுகா, ஞானத்தை விட்டும் போக முடியவில்லை பக்கத்தில் வைத்து பார்க்கவும் முடியவில்லை என்பதை உணர்த்தும் வகையில் ரொம்பவே வருத்தம் அடைந்து விட்டார்.
இதையெல்லாம் பார்த்து ஐஸ்வர்யா எனக்கு பணமே தேவையில்லை நான் டூருக்கு போகவில்லை என்று கோபத்தில் கிளம்பி விடுகிறார். அடுத்ததாக சக்தி மற்றும் ஜனனி அவங்க வேலை விஷயமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே நாச்சியப்பன் வருகிறார். அப்பொழுது உன்னை நான் டாப்பராக ஆக்கியதற்கு காரணமே இல்லாமல் போய்விட்டது. உனக்கு என்று ஒரு லட்சியம் இல்லை அதைப்படி நீ பயணிக்கவும் இல்லை.
அதனால் தான் உன் வாழ்க்கை தற்போது வரை கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் உன் தங்கை படிப்பு சுமாராக இருந்தாலும் அவளுக்கு ஏற்ற வாழ்க்கையை தக்க வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். இருந்தாலும் உன்னுடைய வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்றால் குணசேகரன் அடையாளத்தை விட்டு சக்தி அவருடைய திறமையை நிரூபித்து காட்ட வேண்டும் என்று மருமகனுக்கு ஒரு நல்வழிப்படுத்தும் விதமாக நாச்சியப்பன் அட்வைஸ் பண்ணுகிறார்.
அந்த வகையில் கதிர் உடைய மனசை மாற்றி நந்தினி அப்பா பண்ணுவது போல் இல்லாமல் சக்திக்கு ஏற்ற ஒரு வெற்றியை கொடுக்க நாச்சியப்பன் முன்வரப்போகிறார். இந்த சூழலில் ரேணுகா, ஜனனிக்கு போன் பண்ணி இன்னும் ஐஸ்வர்யா வீட்டுக்கு வரவில்லை என்று சொல்லி நிலையில் ஐஸ்வர்யாவுக்கு என்ன ஆச்சு என்று தெரியாமல் மொத்த குடும்பமும் பரிதவித்து போய் நிற்கிறார்கள்.
முதல் சீசனில் ஸ்கூலுக்கு போயிட்டு வந்த தர்ஷினி காணாமல் போனார். இப்பொழுது ஐஸ்வர்யாவுக்கும் இதே நிலைமையா? இதற்கு இடையில் தர்ஷன் மற்றும் அன்புக்கரசியின் கல்யாணத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்பதற்காக அறிவுகரசி கதிரை சந்தித்து பேசுகிறார். அப்பொழுது அன்புகரசி மற்றும் தர்ஷன் இரண்டு பேரும் நேரடியாக பார்த்து பேசினால் கல்யாணத்தை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது என்று அதற்கு ஏற்ற பிளானில் அறிவுக்கரசி காய் நகர்த்துகிறார்.