Samantha: சமந்தா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா திருமணத்திற்கு பிறகு சமந்தா விடம் அதைப்பற்றி கேட்க எல்லா மீடியாக்களும் ஆவலாக இருந்தன.
சமந்தா இப்போது எப்படி உணர்கிறார் என்பதை தெரிந்து கொள்ள அவருடைய ரசிகர்களும் ஆர்வமுடன் இருந்தார்கள்.
இதற்கு எல்லாம் தான் சமந்தா முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார். விவாகரத்திற்கு பிறகு சமந்தா சினிமாவில் ரொம்பவும் ஆக்டிவாக இருந்தார்.
முதன் முறையாக மனம் திறந்த சமந்தா
யார் கண் பட்டதோ தெரியவில்லை அவருக்கு தோல் அழற்சி நோய் ஏற்பட்டு சினிமாவில் அவ்வளவாக கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறார்.
சிகிச்சை ஒரு பக்கம், சினிமா ஒரு பக்கம் என சமந்தா தன்னுடைய நாட்களை நகர்த்தி வருகிறார்.
இந்த நிலையில் நான்கு சைதன்யா மற்றும் சோபிதாவின் திருமணம் உங்களை கசப்பாக உணர வைக்கிறதா என ஒரு பேட்டியில் கேட்கப்பட்டு இருக்கிறது.
ஒரு பெண் திருமணமாகி குழந்தை பெற்றால் மட்டும் தான் அவள் முழுமையாக இருக்கிறாள் என்று நினைக்கிறீர்கள்.
அதை தாண்டி அவள் இதை செய்யாமல் இருந்தால் கண்டிப்பாக அவள் தனிமையில் தான் இருக்கிறாள் என நீங்களே முடிவு செய்து கொள்கிறீர்கள்.
எனக்கு பிடித்த விஷயத்தை நான் செய்வதால் நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என பதில் கொடுத்திருக்கிறார்.
நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் திருமணத்தால் நான் தனிமையை உணரவில்லை, ரொம்ப உன் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதை வெளிப்படையாக பேசி இருக்கிறார் சமந்தா.