Singapenne: சன் டிவியின் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இன்றைய ப்ரோமோ வெளியாக இருக்கிறது.
இந்த வாரம் முழுக்க வெளியான எபிசோடுகளில் ரசிகர்களிடையே அதிக வெறுப்பை சம்பாதித்தது ஹாஸ்டல் வார்டன் தான்.
ஆரம்பத்தில் வார்டன் மனோன்மணிக்கும் மகேசுக்கும் என்ன உறவு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள நேயர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.
ஆனால் ஆனந்தி வீட்டுக்கு மகேஷை கூட்டிட்டு போய் பெண் கேட்டதிலிருந்து வார்டன் செல்வாக்கு ரசிகர்களிடையே குறைந்துவிட்டது.
ருத்ர தாண்டவம் ஆடும் பார்வதி
இந்த நிலையில் நேற்று எப்படியாவது ஆனந்தியை மகேஷ் உடன் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போக வார்டன் முயற்சி செய்தார்.
ஆனால் ஆனந்தி காயத்ரி என் வீட்டுக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு அன்பு வீட்டுக்கு போய் விட்டாள்.
அதே நேரத்தில் மித்ரா வார்டன் மற்றும் மகேஷ் இருவரும் ஒன்றாக வெளியே போனதை பற்றி பார்வதிக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறாள்.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வார்டன் புதிதாக ஒரு புடவை கட்டி இருக்கிறார். ஆனந்தி அவரிடம் புடவை நல்லாருக்கு நீங்க வாங்கினீங்களா என்று கேட்கிறாள்.
அதற்கு வார்டன் இல்லை என் மகன் வாங்கி கொடுத்தான் என்று சொல்கிறார். அதன் பின்னர் மகேஷ் தான் வாங்கி கொடுத்தார் என்று சொல்கிறார்.
இதனால் ஆனந்திக்கு வார்டன் மற்றும் மகேஷ் மீது சந்தேகம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் மகேஷ் வீட்டில் பார்வதி அவனிடம் ருத்ர தாண்டவம் ஆடுகிறார்.
அந்த வார்டன் உனக்கு யார் என கோபத்துடன் கேட்கிறார். அதற்கு மகேஷ் அவங்க எனக்கு அம்மா மாதிரி என்று சொல்கிறான்.
இதனால் பார்வதி பெரிய அளவில் அதிர்ச்சடைந்தது போல் காட்டப்பட்டு இருக்கிறது. விரைவில் மார்டன் மற்றும் மகேஷ் பற்றிய பிளாஷ்பேக் காட்சிகளை எதிர்பார்க்கலாம்.