வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 7, 2025

அல்வா கொடுக்குறது எப்பவுமே நானா தான் இருக்கணும்.. 11 வருடத்திற்கு பின் அஜித்தை பழி தீர்த்த த்ரிஷா, வைரலாகும் மீம்

Vidaamuyarchi: விடாமுயற்சி படத்திற்கு பின் த்ரிஷா சம்பந்தப்பட்ட மீம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொஞ்சம் லாஜிக்காக யோசித்தால் அட ஆமா இவங்க இதை தான் பண்ணி இருக்காங்க என்று சிலாகிக்கும் அளவுக்கு இருக்கிறது.

நேற்று அஜித் நடிப்பில் ரிலீஸ் ஆன விடாமுயற்சி படம் பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்படி ஒரு படத்தையா இவ்வளவு நாள் சைலன்ட் மோடில் வைத்திருந்தீர்கள் என அஜித் ரசிகர்கள் குறைபடும் அளவுக்கு படம் பாராட்டை பெற்று வருகிறது.

அஜித்தை பழி தீர்த்த த்ரிஷா

இந்த படத்தில் திரிஷாவுக்கு அஜித்தை ஏமாற்றும் கேரக்டர் போல. இதனால் த்ரிஷாவின் சினிமா கேரியரின் மொத்த வரலாற்றையும் எடுத்து ஒரு மீம் உருவாக்கி இருக்கிறார்கள்.

த்ரிஷா மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவை காதலிக்கவில்லை என்று கழட்டி விட்டு விடுவார். அதேபோன்று விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவை கிளைமாக்ஸ் சீனில் கழட்டி விட்டு விடுவார்.

கொடி படத்தில் கேட்கவே வேண்டாம் தனுஷை போட்டு தள்ளி விடுவார். 96 படத்தில் கடைசியில் ராமுக்கு பட்ட நாமம் அடித்து விட்டு ஃபாரின் கிளம்பி விடுவார்.

இப்படி ஏமாற்றிக் கொண்டிருந்த திரிஷாவை மங்காத்தா படத்தில் அஜித் வச்சு செய்திருப்பார்.

எப்போதுமே அல்வா கொடுக்கிறது நானா தான் இருக்கணும் என 11 வருஷம் கழித்து அஜித்தை விடாமுயற்சியில் பழி தீர்த்து இருக்கிறார் திரிஷா என காமெடியாக கிண்டல் செய்து வருகிறார்கள்.

Trisha
Trisha

Trending News