வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 7, 2025

பாக்கியலட்சுமி சீரியல் ரேட்டிங் வரணும்னு என் பொண்ண இப்படி பண்ணிட்டாங்க.. இனியாவின் ரியல் அம்மா வேதனை

Baakiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்னும் கேரக்டரில் நேஹா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ஒரு சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

சமீபகாலமாக நெட்டிசன்கள் அதிகமாக நேஹாவை அதாவது அவர் ஏற்று நடித்துவரும் இனிய கதாபாத்திரத்தை கேலி செய்து வருகிறார்கள்.

இதில் உருவ கேலியும் அடங்கும். இதற்கு காரணம் சீரியலில் இனியா நடன போட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார்.

இனியாவின் ரியல் அம்மா வேதனை

அதில் பரதநாட்டியம் டிரஸ் போட்டுக் கொண்டு குத்தாட்டம் ஆடும் வீடியோ திடீரென இணையத்தில் வைரலானது.

அது முதல் இனியாவை கலாய்ப்பதற்காகவே பாக்கியலட்சுமி சீரியலை ஃபாலோ பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

இது குறித்து நேஹாவின் அம்மா மனம் திறந்து ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் எந்த நடனத்திற்கு எந்த மாதிரி டிரஸ் போட வேண்டும் என்ற பகுத்தறிவு எங்களுக்கு இருக்கிறது.

சீரியலில் எதற்காக அப்படி காஸ்டியூம் கொடுக்கிறார்கள் என தயாரிப்பாளர் இடம் தான் கேட்க வேண்டும்.

ஒரு வேளை இப்படி காட்டினால் தான் சீரியலில் ரேட்டிங் ஏறும் என்பதற்காக இது மாதிரி செய்கிறார்களா என்று தெரியவில்லை என பேசி இருக்கிறார்.

உண்மையில் இந்த நடனம் என்று இல்லை பாக்கியலட்சுமி சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இந்த இனியா கேரக்டர் நெட்டிசன்களிடம் அதிகமாக ட்ரோல் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

Trending News