Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவுக்கு இதுவரை கிடைக்காத முதல் ஆர்டர் பெரிய ஆர்டராக கிடைத்திருக்கிறது. ஆனால் இதை செய்வதற்கு முதலில் கையில் பணம் வேண்டும் என்ன பண்ணலாம் என்று முத்து மீனா யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்பொழுது மீனா, ரவியிடம் கொஞ்சம் பணம் கேட்டு பாருங்கள்.
பணம் கிடைத்தால் அதை வைத்து ஆரம்பித்து விட்டு சம்பளம் வந்ததும் பணத்தை திருப்பி கொடுத்து விடலாம் என்று முத்துவிடம் சொல்கிறார். ஆரம்பத்தில் முத்து தயங்கிய நிலையில் மீனா எடுத்துச் சொன்ன பிறகு ரவி மற்றும் சுருதியிடம் சேர்ந்து கேட்டுப் பார்க்கலாம் என்று இரண்டு பேரும் போய்விட்டார்கள். அப்பொழுது ஒரு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது அதற்கு முதலீடு செய்ய கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது என்று மீனா சொல்கிறார்.
அதற்கு முத்து உன்னிடம் கொஞ்சம் பணம் இருந்தால் வேண்டுமென்று கேட்கிறார். அந்த நேரத்தில் சுருதி கொஞ்சம் கூட யோசனை பண்ணாமல் உங்களுக்கு கிடைத்த முதல் ஆடர் இதில் நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று சொல்லி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்கிறார். அதே மாதிரி எங்க அண்ணி உடைய வெற்றிக்கு நானும் ஒரு சின்ன உதவி பண்ண வேண்டும் என்று ரவி 25 ரூபாய் பணம் கொடுக்கிறார்.
ஆக மொத்தத்தில் மீனாவுக்கு தேவையான 50 லட்ச ரூபாய் பணம் கிடைத்துவிட்டது. இதை வைத்து டெக்கரேஷனை நல்லா பண்ணிவிடலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள். ஆனால் இதைக் கெடுக்கும் விதமாக சிந்தாமணி, விஜயா மூலம் பிளான் போட்டுவிட்டார். அந்த வகையில் மீனா உங்களைப் பற்றி தவறாக சொல்லி உங்களுடைய திமிரை அடக்க வேண்டும் என்றுதான் பூ கட்டி பணம் சம்பாதிக்கிறார்.
இதைப்பற்றி வெளியே அப்படித்தான் மீனா சொல்லிக் கொண்டு வருகிறார் என்று விஜயாவை ஏற்று விடும் அளவிற்கு சிந்தாமணி சொல்லிவிட்டார். இதைக் கேட்டு கடுப்பான விஜயா வீட்டிற்கு வந்து ருத்ர தாண்டவம் ஆடும் வகையில் நீ என்ன என்னுடைய கொட்டத்தை அடக்குவது, வேலைக்கு போகிற, பணம் சம்பாதிக்கிறேன் என்ற திமிரா என்று வாய்க்கு வந்தபடி திட்டி விடுகிறார்.
அப்பொழுது அண்ணாமலை, மீனா அப்படியெல்லாம் பேசக்கூடிய ஆளு கிடையாது. உன்னிடம் யாரு அப்படி சொன்னா அவங்க பெயரை சொல்லு என்று கேட்கிறார். அதற்கு விஜயா எதுவும் சொல்லாமல் மறுபடியும் மீனாவை திட்ட ஆரம்பித்து விட்டார். பிறகு மீனா அப்படியெல்லாம் சொல்லக்கூடிய ஆளு நான் இல்ல, எனக்கு அதுக்கு அவசியமும் இல்லை என்று சொல்லிவிடுகிறார்.
பிறகு கோவப்பட்ட விஜயா, என் வீட்டுக்காரர் கொடுக்கிற தைரியத்தில் நீ ரொம்ப ஆடுற எல்லாத்துக்கும் சேர்த்து ஒருநாள் திருப்பிக் கொடுப்பேன் என்று திட்டி விட்டுப் போய் விடுகிறார். விஜயா, மீனாவை பார்த்து இப்படி திட்டும் பொழுது ரோகினி நக்கலாக சிரித்துக் கொண்டு சந்தோஷப்பட்டு கொள்கிறார். இது எல்லாம் பார்த்து ஸ்ருதி கொட்டம்னா என்ன என்று மீனாவிடம் கேட்கிறார்.
அதற்கு மீனா யார் பேச்சையும் கேட்காமல் நான்தான் என்று அகங்காரத்துடன் இருப்பவர் தான் கொட்டம் என்று சொல்வார்கள். உடனே சுருதி அப்படி என்றால், அத்தைக்கு நிறையவே கொட்டம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார். அடுத்ததாக மீனா டெகரேஷன் பண்ணாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக சிந்தாமணி, விஜயாவுக்கு போன் பண்ணி இன்னைக்கு உங்க மருமகளை வெளியே விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்பொழுது தான் டெக்கரேஷன் பண்ணாமல் தோற்றுப் போய் இனி எந்த ஆர்டரையும் எடுக்க மாட்டார் என்று வத்தி வைக்கிறார். அதன்படி விஜயா கை வலிக்குது என்று டிராமா போட்டு மீனாவை வேலைக்காரி மாதிரி தொடர்ந்து வேலை வாங்கி மண்டபத்திற்கு போக விடாமல் தடுத்து விடுகிறார். ஆனாலும் மீனா வீடியோ கால் மூலம் எடுத்த ஆர்டரை நல்லபடியாக முடித்து வெற்றி பெறுகிறார். மீனாவை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்த விஜயா மூஞ்சில் மீனா கரிய பூசி விட்டார்.