Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா விவாகரத்து நோட்டீசை பார்த்ததும் நெஞ்சு வலி வந்து கோபி என்ன பண்ணுவது என்று தெரியாமல் புலம்பி தவிக்கிறார். ஆனாலும் ராதிகாவை பார்த்து நேரடியாக பேசினால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் ராதிகாவின் வீட்டிற்கு போவதற்கு தயாராகி விட்டார். இதை தெரிந்து கொண்ட ஈஸ்வரி, இப்படிப்பட்ட ஒருத்தி உனக்கு தேவையே இல்லை என தலைமுழுக சொல்கிறார்.
அதற்கு கோபி நான் ஒரு முறை பேசி பார்க்கிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். அப்படி போன பட்சத்தில் ராதிகாவின் வீடு பூட்டு போட்டு இருந்தது. உடனே பக்கத்தில் இருப்பவர்கள் திடீரென்று ராதிகா கிளம்பி போய் விட்டதாகவும் இந்த வீட்டில் யாரும் இல்லை என்றும் சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தில் பாக்யாவும் ராதிகாவை பார்த்து பேசுவதற்காக வருகிறார்.
அப்பொழுது கோபி, ராதிகா இங்கே இல்லை எங்கேயோ போய்விட்டார்கள் என்று சொல்கிறார். உடனே அங்கு நின்று கொண்டே பாக்கியா, ராதிகாவிற்கு ஃபோன் பண்ணி பார்க்கிறார். ஆனால் ராதிகாவின் போன் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டதால் பேச முடியாமல் போய்விடுகிறார். இதனால் அப்செட்டில் இருந்த கோபியிடம் பாக்கியா சொன்னது என்னவென்றால் ஒருத்தர் இருக்கும் போது அவங்க அருமை தெரியாமல் அலட்சியப்படுத்துனீங்க.
இப்பொழுது அவங்க நம்ம பக்கத்தில் இல்லை என்றதும் அவங்கள தேடி அலைய வேண்டியது என்று குத்தி காட்டிவிட்டு போய்விடுகிறார். அதன் பின் பாக்கியம் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ராதிகா போன் பண்ணி பேசுகிறார். உடனே ராதிகாவிடம் கோபி இடம் வந்து சேர்ந்து விடுங்கள் என்று கெஞ்சி பார்க்கிறார். அதற்கு ராதிகா நான் எடுத்த முடிவில் தெளிவாக இருக்கிறேன் நான் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாது.
நானும் என் மகளும் சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கையை இங்கே வாழ்ந்து கொள்கிறோம் தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் என்று அவருடைய கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராதிகா குட் பாய் சொல்லிவிட்டார். உடனே பக்கத்தில் இருந்த கோபி நான் பேசுகிறேன் என்று ஃபோன் வாங்கி பேசுகிறார் அப்பொழுது ராதிகா எதுவும் பேசாமல் கட் பண்ணி விடுகிறார்.
சைக்கோவாகவும் சுயநலமாகவும் இருந்த கோபிக்கு இந்த தண்டனை வேண்டும் என்பதற்கு ஏற்ப கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணி வேற ஒரு கல்யாணம் பண்ணினார். அவருடனும் நிம்மதியான வாழ்க்கை வாழாமல் இருந்த கோபிக்கு தகுந்த தண்டனையாக தான் ராதிகா கொடுத்திருக்கிறார்.