Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் வீட்டிற்கு நான்காவது மருமகளாக வந்த ஜனனி பெரிய ஏமாற்றுத்துடன் அந்த வீட்டை விட்டு வெளியேற முயற்சி எடுத்தார். ஆனால் அப்பத்தா சொன்ன அறிவுரையின்படி அந்த வீட்டில் அடங்கி கிடக்கும் மற்ற மூன்று மருமகளின் இலட்சியத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காக மறுபடியும் அந்த வீட்டிற்கு நுழைந்தார்.
அந்த வகையில் ஜனனியின் காதலை புரிந்து கொண்ட சக்தி, ஜனனிக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக தற்போது வரை எல்லா உதவிகளையும் செய்து வருகிறார். ஜனனி என்ன செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று டிரைவர், ஆகவும் பாதுகாவலராகவும் எல்லா விதத்திலும் பக்கபலமாக இருந்த சக்தியின் வாழ்க்கையைப் பற்றி யாருமே யோசிக்கவில்லை. ஏன் அவரை கூட அதைப் பற்றி யோசிக்காமல் ஜனனி பின்னாடியே அலைந்தார்.
ஆனால் அதை எல்லாம் சரி செய்யும் விதமாக சக்திக்கு தற்போது விடிவுகாலம் பிறந்து விட்டது என்பதற்கு ஏற்ப மாமனார் நச்சுன்னு நல்ல அட்வைஸ் கொடுத்து விட்டார். அந்த வகையில் நந்தினியின் அப்பா மாதிரி இல்லாமல் நாச்சியப்பன், ஜனனிடம் சொன்ன அட்வைஸ் உன்னுடைய லட்சியத்திற்கு நீ போராடுகிறாய் என்றாய் எதற்காக சக்தி வாழ்க்கையை பலியாடாக ஆக்குகிறாய்.
நான் என்ன தவறு உனக்கு பண்ணினேனோ என்று நீ நினைக்கிறாயோ அதே தவறுதான் நீ தற்போது சக்திக்கு செய்து கொண்டிருக்கிறாய். சக்திக்கு என்ன ஆசை கனவு இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அதை அவரை செய்ய விட்டால் அவருடைய வாழ்க்கையும் சந்தோசமாக இருக்கும். அதை விட்டுவிட்டு உன்னுடைய சுயநலத்திற்காக நீ சக்தியை பகடகாயாக பயன்படுத்த வேண்டாம்.
சக்தி அவர் யார் என்று நிரூபித்தால் மட்டுமே குணசேகரனின் அடையாளத்தில் இருந்து அவரால் வெளியே வர முடியும். இல்லையென்றால் கடைசி வரை உனக்கு அடிமையாக தான் இருப்பான். அப்படி இருந்து விட்டால் அந்த குணசேகரனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் என்று சொன்ன படி ஜனனி யோசிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் அப்பா சொன்னதும் சரிதான் என்று ஜனனி புரிந்து கொண்டு சக்திக்கு இனி என்ன தேவையோ அதை யோசித்து நீ முடிவு பண்ணி லட்சியத்தில் ஜெயிக்க பாரு என்று சொல்லிவிட்டார்.
அதோடு மட்டுமில்லாமல் மற்றவர்களின் நலனுக்காக போராடும் ஜனனிக்கும் அவருடைய வாழ்க்கை முன்னேறுவது போல் அடுத்தடுத்து காட்சிகள் அமைந்தால் தான் பார்க்க விறுவிறுப்பாக இருக்கும். இதனை அடுத்து வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகளை பார்த்த ஐஸ்வர்யா நொந்து போனதால் எங்கே போனா என்று தெரியாத அளவிற்கு வீட்டில் இருப்பவர்கள் பரிதவித்து தேடுகிறார்கள்.
அந்த வகையில் ரேணுகா, ஜனனிக்கு போன் பண்ணி ஐஸ்வர்யாவை காணும் இன்னைக்கு அவளுக்கு பள்ளிக்கூடமும் இல்லை. ஆனால் பள்ளிக்கூடம் போகிறேன் என்று தான் போனா என்ன பண்ணுவது என்று கேட்கிறார். உடனே ஜனனி மற்றும் சக்தி ஐஸ்வர்யா படிக்கும் பள்ளிக்கூடத்தில் போய் பார்க்கிறார்கள். மேலும் ஐஸ்வர்யாவை காணும் என்று மற்ற மருமகளும் நாளா பக்கமும் தேடி வருகிறார்கள். அந்த வகையில் தர்ஷினிக்கு ஏற்பட்ட கடத்தல் நிலைமை மாறி ஐஸ்வர்யாவுக்கு வராமல் இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.
இது எதுவும் தெரியாத ஞானம் புத்தி கெட்டுப் போய் பிசினஸ் பண்ண போகிறேன் என்று மொத்த பணத்தையும் தொலைக்க போகிறார். இன்னொரு பக்கம் கதிர் தர்ஷனை வரவழைத்து அறிவுக்கரசி சொன்னபடி அன்புக்கரசியிடம் பேச வைத்து விட்டார். இவர்களுடைய டிராக்கை வைத்து கல்யாணத்தை நடத்தலாம் என்று அறிவுகரசி போட்ட திட்டத்தையும் நான்கு மருமகள் சேர்ந்து தோற்கடிக்க போகிறார்கள்