வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 7, 2025

கயல் சீரியலில் சிவசங்கரிக்கு ஆப்பு வைத்த கௌதம்.. கயலுக்காக அம்மாவை தலைமுழுக போகும் எழில்

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், கயல் கேரக்டருக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சதி செய்த கௌதமுக்கு பதிலடி கொடுக்க சிங்கம் போல் சீறிப் பாய்கிறார் எழில். அதாவது கயல் தவறான இடத்திற்கு சென்று தப்பான பெயரை வாங்கி ஜெயிலில் அவஸ்தைப்பட வேண்டும் என்று கௌதம் மற்றும் சிவசங்கரி பிளான் போட்டார்கள்.

அதன்படி கயலும் சிக்கி போலீஸிடம் மாட்டிக் கொண்டார். அத்துடன் ஜெயிலில் இருந்த கயலை பெரியப்பா வெளியே கொண்டு வந்துவிட்டார். பிறகு வீட்டிற்கு கூட்டிட்டு வந்ததும் கயல், பெரியப்பாவிடம் நன்றி சொல்லி பெரியப்பா செய்த உதவியை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.

இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது என்னை கடவுளாக வந்து காப்பாற்றியது என்னுடைய பெரியப்பா தான் என்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் பெருமிதமாக சொல்கிறார். அதன் பிறகு கயலுக்கு என்ன ஆனது என்று குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது.

அடுத்ததாக ஒட்டுமொத்த குடும்பமும் பெரியப்பாவுக்கு நன்றி சொல்லிய நிலையில் அனைவரும் செண்டிமெண்டாக பேசி பீல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். அடுத்ததாக கயலை தனியாக கூட்டிட்டு போன எழில் உன்னுடைய இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று கேட்க ஆரம்பித்து விட்டார்.

எழில் கேட்ட உடன் கயல் உண்மையை சொல்லும் விதமாக கௌதம் தான் என்று சொல்லிவிடுகிறார். இதை கேள்விப்பட்டதும் ஆவேசப்பட்ட எழில் இந்த கௌதம் ஏன் பிறந்தோம் என்று நினைக்கும் அளவிற்கு அவனுக்கு சரியான பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கிளம்பிவிட்டார்.

எழிலே தடுப்பதற்கு கயல் எவ்வளவோ முயற்சி எடுத்தாலும் பெரியப்பாவுக்கு தெரிந்த பிறகு எழில் கோபப்படுவதிலும் நியாயம் இருக்கிறது. இதை நீ முன்னாடியே என்னிடம் சொல்லி இருந்தால் நானே அவனை கொன்று இருப்பேன் என்று சொல்லி கயலை தடுத்து விடுகிறார்.

இதனால் வெறியுடன் போன கௌதம்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக நல்ல நாலு அடி கொடுத்து கௌதமை உண்டு இல்லைன்னு பண்ணிட்டார். அந்த நேரத்தில் கயல் போய் எழிலை தடுத்து கௌதமிடம் உனக்கு என் மீது கோபம் இருந்தால் நீ என்னிடம் நேரடியாக மோதி இருக்க வேண்டும்.

அதுதான் ஒரு ஆணுக்கு அர்த்தம், அதை விட்டுட்டு என்னுடைய பெயரை களங்கப்படுத்தனும் என்று நினைத்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று வீர வசனம் பேச ஆரம்பித்து விட்டார். உடனே கௌதம் நான் வெறும் அம்பு தான் என்னை இந்த மாதிரி செய்ய சொன்னதே உன்னை பத்து மாசம் சுமந்து பெத்த உங்க அம்மா சிவசங்கரி தான் என்று சொல்லிவிட்டார்.

இதை கேட்டதும் அதிர்ச்சியான எழில் மொத்த கோபத்தையும் அம்மாவிடம் காட்டும் விதமாக சிவசங்கரியை லெப்ட் அண்ட் ரைட் வாங்க கிளம்பி விட்டார். பின்னாடியே போயி கயலும் எந்த பிரச்சினையும் இல்லாமல் தடுப்பதற்கு முயற்சி எடுக்கப் போகிறார்.

அதன் பிறகு எழில் மற்றும் சிவசங்கரி மோதிய நிலையில் எழில் எடுக்கப் போகும் முடிவு என்னவென்றால் இனி நீ என்னுடைய அம்மாவை கிடையாது என் முகத்திலேயே முழிக்காதே என்று மொத்தமாக தலை முழுகப் போகிறார். எவ்வளவு பட்டாலும் இந்த சிவசங்கரியும் திருந்தாமல் கயலுக்கு குடைச்சல் கொடுப்பதால் எழில் அதிரடியான முடிவை எடுத்து அம்மாவுக்கு தண்டனை கொடுக்கப் போகிறார்.

Trending News