சனிக்கிழமை, பிப்ரவரி 8, 2025

எதிர்நீச்சல் 2 வில் கதிருக்கு மரண பீதியை காட்டிய சிம்மக்கல் ராணி.. மன உளைச்சலில் ஐஸ்வர்யா எடுத்த முடிவு

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், ரேணுகா மற்றும் ஞானத்திற்கு இடையே ஏற்பட்ட சண்டையினால் ஐஸ்வர்யா மனம் நொந்து போய் விட்டார். பிறகு தாரா ஸ்கூல் முடித்து வீட்டுக்கு வந்ததும் ஐஸ்வர்யா அக்கா ஸ்கூலில் இல்லை, நான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணி பார்த்தேன் பிறகு அவங்க பஸ்ஸில் வீட்டுக்கு வந்து இருப்பாங்க என்று நினைத்து வந்துவிட்டதாக சொல்கிறார்.

இதனால் பதறிப் போன ரேணுகா, ஐஸ்வர்யா பிரண்ட்ஸ்க்கு போன் பண்ணி ஐஸ்வர்யா பற்றி விசாரிக்கிறார். அப்பொழுது ஐஸ்வர்யாவின் தோழிகள் சொன்னது என்னவென்றால் இன்னைக்கு ஸ்கூல் கிடையாது என்று. உடனே பதட்டமான ரேணுகா, ஜனனிக்கு போன் பண்ணி ஐஸ்வர்யாவுக்கு இன்னைக்கு ஸ்கூல்லே கிடையாது. இவ்வளவு நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை இப்பொழுது தான் அவருடைய தோழிக்கு போன் பண்ணி கேட்டேன்.

எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது நீ கொஞ்சம் பார்த்துட்டு வா என்று சொல்லுகிறார். உடனே ஜனனி மற்றும் சக்தி இருவரும் சேர்ந்து ஐஸ்வர்யா படிக்கும் ஸ்கூலில் போய் பார்க்கிறார்கள். அங்கே இல்லாததால் ஐஸ்வர்யாவுக்கு சொல்லி கொடுக்கும் ஆசிரியரிடம் கேட்கிறார். அதற்கு ஆசிரியர் சொல்வது என்னவென்றால் ஐஸ்வர்யா கொஞ்ச நாள் ரொம்பவே அப்செட்டில் இருந்தார்.

யாரிடமும் சரியாக பேசுவதில்லை ஒரே ஒரு பையனிடம் மட்டும் தான் பேசிக் கொண்டிருப்பார் என்று தகவலை கொடுக்கிறார்கள். பிறகு ஜனனி சிசிடி கேமராவை பார்க்கலாம் என்று சொல்லிய நிலையில் ஸ்கூல் வாசலில் வைக்கப்பட்டிருந்த சிசிடி கேமராவில் ஐஸ்வர்யா கூட படிக்கும் ஒரு பையனுடன் ஆட்டோவில் ஏறி போவதை பார்த்து விடுகிறார்கள்.

பிறகு ஜனனி அந்தப் பையனுடைய அட்ரஸை கேட்டு அங்க போய் விசாரிக்கலாம் என சக்தியை கூட்டிட்டு போகிறார். இன்னொரு பக்கம் ரேணுகா மற்றும் ஈஸ்வரி சேர்ந்து ஐஸ்வர்யாவை தேடி அலைகிறார்கள். எங்கேயும் தகவல் கிடைக்காததால் ரேணுகா ஜனனிக்கு போன் பண்ணி என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு ஜனனி நடந்து உண்மையை எதுவும் சொல்லாமல் நான் ஐஸ்வர்யாவை கண்டுபிடித்து கூட்டிட்டு வருகிறேன் என்று சமாதானம் செய்கிறார்.

இதற்கிடையில் கதிர் தர்ஷன் அறிவுக்கரசி அன்புக்கரசி என அனைவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தர்ஷன் மற்றும் அன்புக்கரசிக்கு கல்யாணம் சம்மதம் என்று தெரிவித்த நிலையில் தர்ஷன் மனசை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த வாட்ச் மற்றும் பிரேஸ்லெட் என கொடுத்து ஆடம்பரமான வாழ்க்கையை சொல்லி தர்ஷனை முழுமையாக அறிவுக்கரசி அவருடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து விட்டார்.

அந்த வகையில் இனி தர்ஷனை யார் குழப்பினாலும் கல்யாணத்தை தடுத்து நிறுத்த முடியாது என்பதற்கு ஏற்ப எல்லோரும் தெளிவாகி விட்டார்கள். அறிவுக்கரசி அடுத்து சொன்னது என்னவென்றால் இன்னும் பத்து நாளில் ராஜ மரியாதை உடன் குணசேகரன் மாமாவை வெளியே கூட்டிட்டு வந்து விடுவேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டதும் கதிர் முகத்தில் மரண பீதி தெரிந்து விட்டது. ஏனென்றால் குணசேகரன் வந்துவிட்டால் மறுபடியும் கதிர் செல்லா காசாக மல்லுவேட்டி மைனருக்கு மாற வேண்டியது தான்.

அதனால் இன்னொரு பக்கம் குணசேகரனை வெளியே விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்ற ஏற்பாடுகள் அனைத்தையும் கதரின் மாமனார் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் என்ன இருந்தாலும் இனி குணசேகரன் வெளியே வந்து அவருடைய ஆட்டத்தை ஆரம்பித்தால் தான் கதை சூடு பிடிக்கும்.

Trending News