சனிக்கிழமை, பிப்ரவரி 8, 2025

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற பேட் கேர்ள்.. சர்ச்சைகளை தாண்டி வெற்றிமாறனுக்கு கிடைத்த கௌரவம்

Bad Girl: வெற்றிமாறன் இயக்கம் மட்டுமில்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். அதில் அவருடைய உதவியாளர் வர்ஷா பரத் பேட் கேர்ள் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதன் டீசர் விழா சமீபத்தில் நடைபெற்றது. அதை தொடர்ந்து வெளியான டீசரை பார்த்த பலருக்கும் அதிர்ச்சி தான்.

அதில் படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு பல காட்சிகள் இருந்தது. ஆனாலும் முழு படமாக பார்க்கும் போது எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் ஒரு பக்கம் இருந்தது.

ஒரு சிலர் படத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் அரசியல் பிரமுகர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் படத்தை தயாரித்த வெற்றிமாறனை கடுமையாக விமர்சித்தார்கள்.

சர்ச்சைகளை தாண்டி வெற்றிமாறனுக்கு கிடைத்த கௌரவம்

அதேபோல் டீசருக்கு வாழ்த்து சொன்ன பா. ரஞ்சித், விஜய் சேதுபதி கூட இந்த சர்ச்சையில் சிக்கினார்கள். உங்க வீட்டு பொண்ணோட இந்த படத்தை பார்க்க முடியுமா என நெட்டிசன்களும் கொதித்தனர்.

இப்படி டீசரிலேயே பரபரப்பை ஏற்படுத்திய பேட் கேர்ள் தற்போது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் NETPAC விருதை வென்றுள்ளது.

அறிமுக இயக்குனர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் படத்தின் கதை பலரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Trending News