Parvathy: மலையாளத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பார்வதி. சமீபத்தில் விக்ரமுக்கு இணையாக தங்கலான் படத்தில் அவர் நடிப்பில் அசத்தியிருந்தார்.
சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய காதல் முறிவு பற்றியும் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
என்னுடைய முன் கோபத்தால் தான் பிரேக் அப் ஆனது. சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட எனக்கு கோபம் வரும். இதனால்தான் நாங்கள் பிரிந்தோம்.
தங்கலான் பார்வதி ஓப்பன் டாக்
சமீபத்தில் கூட என்னுடைய முன்னாள் காதலரை பார்த்தேன். இப்போதும் நாங்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறோம்.
ஆனால் இன்னொரு முறை காதலிக்க வேண்டும் என்றால் பலமுறை யோசித்துதான் முடிவு எடுப்பேன் என கூறியுள்ளார். மேலும் டேட்டிங் ஆப் ஒன்றில் கூட உறுப்பினராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதில் யாராவது நல்ல நபர்கள் இருப்பார்களா என்று பார்ப்பேன். இருந்தாலும் பார்த்து பேசி பழகி வரும் காதலில் தான் நம்பிக்கை இருப்பதாக பார்வதி மனம் திறந்து பேசியுள்ளார்.