செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2025

2025 தொடக்கத்திலேயே டேமேஜ் ஆன 5 பிரபலங்கள்.. முகநூல் வாசிகளிடம் பலமாக அடி வாங்கி கொண்டிருக்கும் VJ சித்து!

VJ Siddhu: 2025 ஆம் ஆண்டு பிரபலங்களுக்கு கொஞ்சம் மோசமான ஆண்டு தான் போல.

இந்த வருடம் ஆரம்பித்து 40 நாட்களே ஆகி இருக்கும் நிலையில் ஐந்து பிரபலங்கள் இணையவாசிகளிடம் பெரிய அளவில் டேமேஜ் ஆகி இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்க்கலாம்.

டேமேஜ் ஆன 5 பிரபலங்கள்

நயன்தாரா: அவங்க நார்மல் பீப்பிள் இல்ல, இந்த வசனம் தான் 2025 தொடங்கி வைத்திருக்கிறது.

இன்ஸ்டா, யூட்யூப் பிரபலங்களை நேரில் அழைத்து தன்னுடைய வியாபாரத்தை வளர்க்க நினைத்தார் நயன்தாரா. கடைசியில் உள்ளதும் போச்சுடா என்று ஆகிவிட்டது.

பொட்டேட்டா பேஸ்: பொட்டேட்டா பேஸ் என்ற யூடியூப் கிரியேட்டர் தனக்கு வரும் பெய்டு பிரமோஷன் பற்றி வெளிப்படையாக சொல்ல மறுப்பதாக இன்னொரு கிரியேட்டர் குற்றச்சாட்டு வைத்தார்.

இதன் மூலம் பொட்டேட்டா பேஸ் கிரியேட்டர் பெரிய அளவில் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்து இருக்கிறார்.

சீமான்: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இந்த வருடம் பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

அதிலும் சீமான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை, அவருடன் எடுத்த போட்டோ எடிட்டிங் என பகிரங்க குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

மிஸ்கின்: இயக்குனர் மிஸ்கின் வாயை திறந்தாலே சர்ச்சை தான். அதிலும் இந்த வருடம் ஒரு பட வெளியீட்டு விழாவில் ஏடாகூடமாக பேசி கடைசியில் பொதுவெளியில் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

விஜே சித்து: யூடியூப் சேனல் ஆரம்பித்து மிக குறுகிய காலத்திலேயே 4 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை சம்பாதித்திருக்கிறார் VJ சித்து. இதுவரை இவரை பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் என்று எதுவுமே வந்தது கிடையாது.

கடந்த சில நாட்களாக இவர் தன்னுடன் வேலை செய்பவர்களை மதிப்பதில்லை, மற்றவர்களை மட்டம் தட்டி மேலே வருகிறார் என முகநூலில் பெரிய அளவில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

Trending News