Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு, அப்பா மலேசியாவில் பெரிய பிசினஸ் பண்ணி அதிக அளவில் பணத்தை சேர்த்து வைத்திருக்கிறார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக தான் விஜயா, ரோகிணியை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். விஜயா மட்டும் இல்லாமல் மனோஜும் ரோகிணி இடம் அதிக பணம் இருக்கிறது, அந்த பணம் அனைத்தும் நமக்கு தான் வந்து சேரும் என்ற நப்பாசையில் சுற்றி வருகிறார்.
ஆனால் இதற்கெல்லாம் கொஞ்சம் கூட தகுதியே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தான் ரோகிணியின் கேரக்டர். எத்தனை பொய் சொல்லி இருந்தாலும் கல்யாணத்துக்கு பிறகு கட்டின புருஷனுக்கும் வாழவந்த குடும்பத்திற்கும் உண்மையாக இருந்திருந்தால் கூட ஓரளவுக்கு ரோகிணியின் கடந்த கால வாழ்க்கைக்கு ஒரு பதில் கிடைத்திருக்கும்.
ஆனால் ரோகினியோ தப்புக்கு மேல தப்பு செய்து அவருடைய வாழ்க்கைக்காக யாருடைய வாழ்க்கையை பற்றியும் யோசிக்காமல் சுயநலமாக இருந்து வருகிறார். தற்போது இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாகத்தான் ரோகிணியின் மலேசியா டிராமாவுக்கு எண்டு கார்டு போடப் போகிறார்கள். அதாவது மலேசியாவில் இருக்கும் அப்பாவுக்கு பதிலாக தனக்கு ஒரு மாமா இருக்கிறார் அவர் மூலம் நாம் பேசிக் கொள்ளலாம் என்று கசாப்பு கடையில் மணியாக வேலை பார்த்துக் கொண்டிருப்பவரை மாமாவாக ரோகிணி நடிக்க கூப்பிட்டு இருந்தார்.
அவரும் ரோகினிக்காக பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி முத்துவின் குடும்பத்தை ஏமாற்றி வருகிறார். தற்போது கையும் களவுமாக மாட்டும் விதமாக ஒரு சம்பவம் நடைபெறப் போகிறது. அதாவது அண்ணாமலையின் நெருங்கிய தோழர் பரசுராமன் மகள் யாரையோ காதலித்து அவனுடன் போய்விட்டார் என்று அண்ணாமலை இடம் வந்து கண்ணீர் விட்டு புலம்புகிறார். இதை பார்த்த முத்து, அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு உங்க மகளை நான் தேடிப் பிடித்துக் கூட்டிட்டு வருகிறேன் என்று வாக்கு கொடுத்து விட்டார்.
இதே மாதிரி ரோகினியின் மாமாவாக நடிக்க வந்த கசாப்பு கடை மணியின் நெருங்கிய உறவினர் மகனும் காதலித்த பெண்ணுடன் போய்விட்டார் என்று தகவல் தெரிய வந்துவிட்டது. உடனே மணி, நான் கண்டுபிடித்து பொண்ணை பற்றி விசாரித்து நல்ல குடும்பமாக இருந்தால் நாம் அவர்களை சேர்த்து வைக்கலாம் என்று முடிவு எடுத்துவிட்டார். இதனை தொடர்ந்து முத்து அந்தப் பெண்ணை கண்டுபிடித்து அண்ணாமலையின் தோழர் பரசுராமன் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்.
அப்பொழுது அந்தப் பொண்ணு காதலித்த நபருடன் கசாப்பு கடை மணி பரசுராமன் வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். அங்கே முத்துவும் மீனாவும் இருப்பதால் மணியை சந்திக்கப் போகிறார்கள். அந்த வகையில் முத்து மீனாவை பார்த்ததும் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக மணி ஏகப்பட்ட பொய்களை சொல்லி நழுவ பார்ப்பார். ஆனாலும் முத்து இது தான் சரியான நேரம் ரோகிணி மாட்டுவதற்கு என்று நினைத்து மணியை உண்டு இல்லைன்னு ஆக்கி உண்மை அனைத்தையும் தெரிந்து கொள்ளப் போகிறார்.
இதுதான் ரோகினிக்கு அடுத்து வைக்க போகும் செக்காக இருக்கப் போகிறது. ஏற்கனவே அண்ணாமலையின் பணத்தை வைத்து பிசினஸ் ஆரம்பித்த விஷயம் வீட்டிற்கு தெரிந்து பூகம்பம் ஆகிவிட்டது. அந்த வகையில் அடுத்ததாக மலேசியா ட்ராமாவிலும் ரோகிணி கையும் களவுமாக சிக்க போகிறார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து ரோகிணியின் ரகசியங்களை முத்து தோண்டி கிளறப் போகிறார்.
ஆரம்பத்தில் பொய்யும் பித்தலாட்டமும் சொல்லுவது வாழ்க்கையில் சந்தோசம் கிடைப்பது போல தான் இருக்கும். ஆனால் அதன்பிறகு தான் அதற்கான கர்மாவை வேலை செய்யும். அது போல தான் தற்போது ரோகிணி பற்றிய விஷயங்கள் வெளிவந்ததும் இதுவரை ஆடிய ஆட்டத்திற்கு பதிலடி கிடைத்தது போல் அவஸ்தைப்பட போகிறார்.