Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
வார்டன் மற்றும் மகேஷ் இருவருமே ஆனந்தி மனசுக்குள்ள என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள எந்த ஆர்வமும் காட்டவில்லை.
அவர்களை பொறுத்த வரைக்கும் மகேஷின் காதல் ஜெயித்தால் போதும் என்று இருக்கிறார்கள்.
ஆனந்தியை சென்டிமெண்டாக லாக் பண்ணும் வார்டன்
இன்னொரு பக்கம் பார்வதி மகேஷின் வாழ்க்கையில் இருந்து வார்டன் மனோன்மணியை எப்படியாவது துரத்தி விட வேண்டும் என முடிவெடுத்து விட்டார்.
இந்த பிரச்சனை முத்தி போய் மகேஷ் வீட்டை விட்டு வெளியேறி விட்டான். அவன் எங்கே இருக்கிறான் என்பதை அன்பு ஒருத்தருக்கு மட்டும் போன் பண்ணி மகேஷ் சொல்கிறான்.
உடனே அன்பும் மகேஷை தேடி ஓடுகிறான். அதே நேரத்தில் தில்லைநாதன் மனோன்மணிக்கு ஃபோன் செய்து நீ சொன்னால் மட்டும்தான் மகேஷ் இங்கே வருவான் என கெஞ்சுகிறார்.
ஆனால் மனோன்மணி ஆனந்தியிடம் நீ மகேஷ் காதலை ஏற்றுக் கொண்டால்தான் இந்த பிரச்சனை எல்லாம் முடியும் என்று சொல்கிறார்.
தன்னுடைய மகன் ஆசை நிறைவேறுவதற்காக ஆனந்தி விருப்பம் என்ன என்று தெரிந்து கொள்ள வார்டன் மனோன்மணி நினைக்கவே இல்லை.
அதே நேரத்தில் தன்னுடைய காதல் ஜெயிப்பதற்காக மகேஷ் தன்னுடைய சொத்து, அப்பா, அம்மா எல்லாத்தையும் விட்டு விட்டு வருகிறான்.
ஆனால் அன்பு அவனையே நினைத்துக் கொண்டிருக்கும் ஆனந்தியை மகேசுக்காக விட்டுக் கொடுக்க வேண்டும் என நினைப்பது முட்டாள்தனமான முடிவு. அன்புவின் இந்த முடிவை ஆனந்தி ஏற்றுக்கொள்கிறாயா என பொறுத்திருந்து பார்க்கலாம்.