Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா வீட்டில் இருந்து கொண்டு மாமியாரையும் கவனித்து கல்யாண மண்டபத்திற்கான டெக்கரேஷனையும் நல்லபடியாக முடித்து விட்டார். இதனை பாராட்டும் வகையில் முத்து, மாலை வாங்கிட்டு வந்து குடும்பத்தில் இருப்பவர்கள் முன்னாடி மீனாவுக்கு போட்டு மீனா அடைந்த வெற்றியை கொண்டாடிவிட்டார்.
இதனால் மீனா பெருத்த மகிழ்ச்சி அடைந்த நிலையில் அண்ணாமலை ரவி சுருதி மூன்று பேரும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். மீனாவின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத விஜயா மனோஜ் மற்றும் ரோகினி முகத்தில் ஈ ஆடவில்லை. அத்துடன் மீனா, அடுப்பங்கரைக்கு தனியாக முத்துவை கூட்டிட்டு போயி உங்க அம்மாவுக்கு கை வலி எதுவும் இல்லை.
ஆனால் நான் எடுத்திருக்கும் இந்த ஆர்டரை நல்லபடியாக பண்ணக்கூடாது என்பதற்காக கைவலி போல் டிராமா போட்டிருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் அந்த சிந்தாமணி தான், இவர்கள் இருவரும் போனில் பேசிக் கொண்டிருப்பதை நான் கேட்டுவிட்டேன் என்று எல்லா உண்மையும் சொல்லி விடுகிறார். உடனே முத்து வீட்டுக்குள் வந்து விஜயா போட்ட டிராமாவை போட்டு உடைத்து விடுகிறார்.
அப்பொழுது அண்ணாமலை ரவி மற்றும் ஸ்ருதி அனைவரும் சேர்ந்து விஜயாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார்கள். இதனை தொடர்ந்து முத்து புதுசாக ஆரம்பிக்கப் போகும் கார் டிரைவிங் ஸ்கூல் பற்றியும் எல்லோரிடமும் சொல்கிறார். இதை கேட்டதும் அண்ணாமலை ரொம்பவே சந்தோஷப்பட்டு விட்டார். அத்துடன் வீட்டு வாசல் முன்னாடி ஒரு போர்டு வைக்க போவதாக சொல்கிறார்.
உடனே இதை கெடுக்கும் விதமாக ரோகிணி அப்படி வைத்து விட்டால் கரண்ட் பில் அதிகமாக வரும் என்று சொல்லி விஜயா மனதை மாற்றி விட்டார். பிறகு விஜயாவும் நான் சம்மதிக்க மாட்டேன் இது என்னுடைய வீடு என்று சொல்லி நினைவில் அண்ணாமலை என்னுடைய பெயரிலும் இருக்கிறது என்று சொல்கிறார். பிறகு முத்து மற்றும் மீனா வெறும் போர்டு மட்டும்தான் இருக்கும். ஆனால் ரோட்டில் வைத்து தான் நான் சொல்லிக் கொடுப்பேன் வீட்டிற்குள் யாரும் வர மாட்டாங்க என்று சொல்கிறார்கள்.
பிறகு அண்ணாமலை சம்மதம் கொடுத்த நிலையில் முத்துவின் பிசினஸுக்கும் ஒரு வழி பிறந்து விட்டது. தற்போது இவர்கள் இருவருமே பிசினஸில் ஒரு படி முன்னேறி விட்டார்கள். இதனை தொடர்ந்து மீனாவின் கம்பெனி பெயரை ரிஜிஸ்டர் பண்ணி அடுத்த கட்ட லெவலுக்கு உயர்த்துவதற்காக முத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டார். இதையெல்லாம் பார்த்து ரோகினி வாய் அடைத்து போய் பொறாமையில் தவிக்கிறார்.
மற்றவர்களின் சந்தோஷத்தை அளித்து தான் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைத்த ரோகினி பலமுறை அவருடைய தலையில் அவரே மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் அளவிற்கு சம்பவங்களை செய்திருக்கிறார். ஆனாலும் தற்போது வரை நிம்மதியான வாழ்க்கை இல்லாமல் தான் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மீனா மற்றும் முத்து மற்றவர்கள் யாருக்கும் கெடுதல் நினைக்காத நிலையில் வெற்றி கொஞ்சம் கொஞ்சமாக தேடி வருகிறது.