Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ராதிகா பிடிவாதமாக விவாகரத்து வேண்டும் என்று கோர்ட்டில் சொல்லிவிட்டார். இதனால் நொந்து போன கோபி வீட்டுக்கு வந்த நிலையில் ஈஸ்வரி இடம் ஆறுதல் தேடுகிறார். ஆனால் ஈஸ்வரியோ, ராதிகா பாதியில் வந்தவள் தானே அவளை நினைத்து நீ ஏன் இவ்வளவு தூரம் கவலைப்படுகிறாய்.
உன் கூட எப்பொழுதும் நாங்கள் கடைசி வரை இருப்போம், நீ எதை நினைத்தும் கவலைப்படாமல் உன்னுடைய வேலையில் கவனம் செலுத்து என்று சொல்கிறார். பிறகு கோபி கோர்ட்டுக்கு பாக்யாவும் வந்திருந்தாள், அப்பொழுது எனக்கு தோன்றிய ஒரு விஷயம் ஒன்னே ஒன்னு தான். இதே மாதிரி தான் பாக்கியாவுக்கும் விவாகரத்து நோட்டீஸ் நான் அனுப்பி வைத்தேன்.
அப்பொழுது பாக்யாவின் நிலைமை எந்த மாதிரியாக இருந்திருக்கும் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அதை பற்றி எதையும் யோசிக்காமல் இப்பொழுது வரை எனக்கு நல்லது மட்டுமே நினைத்து வருகிறார். உண்மையில் நான் பாக்கியாவை சரியாக புரிந்து கொள்ளாமல் போய் விட்டேன். ராதிகா வேண்டும் என்று பாக்யாவை உதறித் தள்ளிட்டு போனேன்.
ஆனால் அந்த ராதிகா இப்பொழுது என்னை வேண்டாம் என்று போன பிறகுதான் எனக்கு பாக்யாவின் சூழ்நிலை புரிகிறது என்று பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். உடனே ஈஸ்வரியின் மடியில் படுத்துக்கொண்டு கோபி ஆறுதல் தேடுகிறார். புத்தருக்கு ஞானம் அரசமரத்தடியில் கிடைத்தது போல் கோபிக்கு ராதிகா விவாகரத்து அனுப்பியதும் கொஞ்சம் புத்தி தெரிய ஆரம்பித்து விட்டது.
ஆனாலும் காலம் கடந்த விஷயத்திற்கு மதிப்பில்லை என்பதற்கு ஏற்ப கோபியின் புரிதலும் இருக்கிறது. இதனை தொடர்ந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு எழில் அவருடைய படத்திற்கான இசை வெளியீட்டு விழா ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பாக்கியலட்சுமி மாஸாக கிளம்பிவிட்டார். அத்துடன் இனியவும் அந்த நிலையில் அம்மாவை பார்த்து மெய்மறந்து போய்விட்டார்.
பிறகு அம்மாவுடன் சேர்ந்து போட்டோக்களை எடுத்து விடுகிறார். இனியா தனியாக செல்பி எடுத்து அதை வாட்ஸ் அப்பில் அவருடைய காதலனுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த வகையில் இனியா புது லவ் ட்ராக்கில் சிக்கிக்கொண்டார். பிறகு இனியா, போனை பார்த்து தனியாக சிரித்துக் கொண்ட நிலையில் பாக்யா என்ன தனியாக சிரிக்கிறாய் என்று கேட்கிறார்.
உடனே இனியா எதுவும் இல்லை என்று சொல்லி சமாளித்து விடுகிறார். அடுத்ததாக பாக்கியா பங்ஷனுக்கு கிளம்பிய நிலையில் எழிலின் வெற்றியை பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், ரோட்டில் போறவர்கள் அனைவரிடமும் பெருமையாக சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். பிறகு அமிர்தா எழில் அனைவரும் இசை வெளியீட்டு விழாவில் பாக்யாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
அங்கே ஜெனி செழியன் அனைவரும் வந்து விட்டார்கள். இதனை தொடர்ந்து பாக்யாவும் வரப்போகிறார். அத்துடன் பாக்கியா, ராதிகாவையும் வரச் சொல்லி இருக்கிறார். பாக்யா கூப்பிட்டதற்காக ராதிகா வரப்போகிறார். எட்டு மாதங்களுக்குப் பிறகு ஆசை ஆசையாக காதலித்த ராதிகாவை கோபி சந்திக்கப் போகிறார்.