Vadivelu: நல்ல குடும்ப கதைகளுக்கு இப்போது தமிழ் சினிமாவில் பஞ்சம் ஏற்பட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு காலகட்டத்தில் இயக்குனர் வி சேகர் இயக்கத்தில் வெளியான படங்களை கூட்டம் கூட்டமாக போய் தியேட்டரில் பார்த்தார்கள்.
உண்மையை சொல்லப்போனால் நம்மில் பலருக்கும் இந்த படங்களின் பெயர் எப்போதுமே குழப்பமாக இருக்கும்.
இயக்குனர் வி சேகர் இயக்கத்தில் குடும்பங்கள் கொண்டாடிய ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.
குடும்பங்கள் கொண்டாடிய 6 படங்கள்
பொறந்த வீடா புகுந்த வீடா: பானுப்ரியா மற்றும் சிவகுமார் நடிப்பில் வெளியான படம் பொறந்த வீடா புகுந்த வீடா.
திருமணமான பெண்கள் கல்யாணமாகி வந்த வீடு, பிறந்த வீடு இரண்டுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் கதைகளம்.
அதிலும் கவுண்டமணி செந்தில் காம்போவில் இந்த படத்தின் காமெடிகள் எல்லாம் ஏ கிளாஸ். குமாரி மீனா என்று வரும் காமெடி காட்சி இன்று வரை பிரபலம்.
வரவு எட்டணா செலவு பத்தணா: நாசர், ராதிகா, வடிவேலு, கோவை சரளா, கவுண்டமணி, செந்தில், ஜெய்சங்கர் நடிப்பில் உருவான படம் தான் வரவு எட்டணா செலவு பத்தணா.
இந்த படத்தில் அரசியல்வாதியாக வரும் கவுண்டமணி மற்றும் வடிவேலு காமெடி காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும்.
மனைவி கொடுக்கும் பொருளாதார அழுத்தத்தால் கணவனின் முடிவுகள் எப்படி மாறுகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டி இருக்கும்.
காலம் மாறி போச்சு: பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகள் இடையே வேறுபாடு காட்டும் பெற்றோர்களுக்கு பெரிய பாடமாய் அமைந்த படம் காலம் மாறி போச்சு.
பாண்டியராஜன், ஆர் சுந்தர்ராஜன், வடிவேலு, சங்கீதா, ரேகா, கோவை சரளா என இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கும்.
இந்த படத்தில் வந்த வாடி பொட்ட புள்ள வெளியே பாடல் இன்று வரை பிரபலம்.
விரலுக்கேத்த வீக்கம்: லிவிங்ஸ்டன், வடிவேலு, விவேக், குஷ்பூ, கனகா, கோவை சரளா காம்போவில் வெளியான படம் தான் விரலுக்கேத்த வீக்கம்.
இந்த படத்தில் வடிவேலு மற்றும் விவேக் கெமிஸ்ட்ரியில் வெளியான காமெடி காட்சிகள் அத்தனையுமே வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை: அண்ணன் தம்பிகளின் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான படம் தான் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
இந்தப் படத்தில் நாசர், குஷ்பூ, வடிவேலு, கோவை சரளா, கரன், ரோஜா, விவேக் ஆகியோர்கள் நடுத்திருப்பார்கள். இந்த படத்தில் வடிவேலு ஏற்று நடித்த பாக்சர் பாண்டி கேரக்டர் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது.