Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா நினைத்தபடி பூ டெக்ரேசன் பண்ணி பிசினஸில் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை பார்த்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் எடுத்த கல்யாண டெக்கரேஷன் ஆர்டரை நல்லபடியாக முடித்து விட்டார். இதற்கான லாபமும் கிடைத்த நிலையில் முத்து, மீனாவுக்கு என்று தனி அக்கவுண்ட் ஓபன் பண்ணி செக் புக் ஏடிஎம் கார்டு என அனைத்தையும் வாங்கி கொடுத்து விட்டார்.
அத்துடன் மீனா சம்பாதித்த பணத்தை அந்த அக்கவுண்டில் போட்டுவிட்டு ஏடிஎம் கார்டு மற்றும் செக்கையும் கையில் கொடுத்து விட்டார். உடனே மீனா இந்த செக் புக் இல் இருந்து முதல்ல நாம் ரவி சுருதிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிடலாம் என்று முடிவு பண்ணுகிறார். அப்பொழுது அதை எழுதி சுருதியிடம் கொடுக்கும் பொழுது மனோஜ் அதெல்லாம் எப்படி எழுதணும் என்று தெரியுமா என நக்கலாக கேட்கிறார்.
உடனே மீனா நான் அந்த அளவுக்கு படிச்சிருக்கேன்னு உங்க அண்ணன் கிட்ட சொல்லுங்க என சரியாக நோஸ்கட் பண்ணி விட்டார். பிறகு மீனா, ரவி மற்றும் சுருதிக்கு கொடுக்க வேண்டிய 50 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு செக்கை கொடுத்து விடுகிறார். இதையெல்லாம் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத விஜயா ரோகினி மற்றும் மனோஜ் வயிற்றெரிச்சலில் ரூமுக்குள் போய்விடுகிறார்கள்.
பிறகு ரோகிணி ஷோரூம் இல் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஜிஎஸ்டி கட்டவில்லை என்று மனோஜிடம் கேள்வி கேட்கிறார். மனோஜ் சாதாரணமாக நான் மறந்துவிட்டேன் என்று சொல்லிய நிலையில் ரோகிணி பதட்டமாகி இதை ஒழுங்காக கட்டவில்லை என்றால் தேவையில்லாத பிரச்சினை வரும். அதனால் இப்பொழுதே ஆபீஸில் பேசிவிட்டு வா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் மனோஜ் இதெல்லாம் இப்பொழுது பெரிய விஷயம் இல்லை கடையில் இருக்கும் கஸ்டமரை கவனிக்கலாம் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் ரோகிணி பயந்த மாதிரி ஜிஎஸ்டி ஆபீஸ் இல் இருந்து வரி கட்டவில்லை என கடையை சீல் பண்ண வந்து விட்டார்கள். பிறகு ரோகிணி அவர்களிடம் கெஞ்சிய நிலையில் 3 மணி நேரத்திற்குள் நீங்கள் வட்டியுடன் ஜிஎஸ்டியை கட்டிவிட்டீர்கள் என்றால் நாங்கள் எதுவும் பண்ண மாட்டோம்.
இல்லையென்றால் கடையை சீல் வைத்து விடுவோம் என்று சொல்லிவிடுகிறார்கள். அப்படி மட்டும் பண்ணிவிட்டால் கடையில் வியாபாரம் கெட்டுப் போய்விடும் என்று பதட்டமான ரோகினி எல்லாத்துக்கும் சம்மதம் கொடுத்த நிலையில் அம்மாவுக்கு போன் பண்ணி பார்க்கிறார். ஆனால் ரோகினி அம்மா, கிருஷை ஸ்கூலில் விட வந்திருக்கிறார். அப்பொழுது முத்து பார்த்த நிலையில் இரண்டு பேரும் சந்தித்து பேசிக் கொள்கிறார்கள்.
உடனே கிருஷை கடைக்கு கூட்டிட்டு போய் கொண்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி முத்து கூட்டிட்டு போய் விடுகிறார். அந்த நேரத்தில் ரோகிணி கால் பண்ணியதும் நடந்த விஷயத்தை ரோகினி அம்மா ரோகினிடம் சொல்கிறார். உடனே ரோகினி இந்த முத்துவுக்கு வேற வேலையே இல்லை என்று சொல்லி இப்பொழுது அதைவிட வேற ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டேன்.
அதனால் வீட்டில் இருக்கும் என்னுடைய நகையை எடுத்துட்டு நான் சொல்ற இடத்தில் வந்து கொடு என ரோகினி சொல்கிறார். அதன்படி ரோகினி, நகையே அடகு வைத்து மூணு லட்சம் ரூபாய் பணத்தை ஏற்பாடு பண்ணி விடுகிறார். பிறகு ஷோரூமுக்கு வந்த ஜிஎஸ்டி ஆபீஸ்ரிடம் அந்த பணத்தை கட்டிய நிலையில் பிரச்சனையை ஒரு வழியாக முடித்து விட்டார்கள்.
ஆனால் இதையெல்லாம் பார்த்த மனோஜ், நீ இல்லன்னா என்னுடைய கதி என்னத்துக்கு ஆகியிருக்கும். நீதான் எனக்கு எல்லாமே, உன்னைத் தவிர வேறு யாரும் என்னை புரிந்து கொள்ள மாட்டாங்க. நீ இல்லனா நா இல்லை என்று ரோகினி கையைப் பிடித்து நீ தான் எனக்கு உலகமே என்று சொல்லும் அளவிற்கு தஞ்சம் அடைந்து விட்டார். இதைதான் ரோகிணியும் எதிர்பார்த்தார், ஏனென்றால் எந்த ஒரு ரகசியமும் வெளிவந்தாலும் அம்மாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு நம்மளை டீலில் விட்டு விடக்கூடாது என்று பயந்தார்.
ஆனால் தற்போது ரோகினிடம் மனோஜ் மொத்தமாக சரண் அடைந்ததால் இனி விஜயா என்ன கணக்குப் போட்டாலும் அது எதுவும் நடக்காது என்பதற்கு ஏற்ப மனோஜ் மூலமாக விஜயாவின் கொட்டத்தை ரோகினி அடக்குவதற்கு பிளான் பண்ணிவிட்டார்.