Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், தன்னை விட்டு ரொம்ப தூரம் காவேரி போனதாக நினைத்து விஜய் ஒவ்வொரு நாளும் துடித்துக் கொண்டு வருகிறார். தற்போது ஆபீஸ்க்கு போயிட்டு காவிரிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க என்னெல்லாம் நினைத்து வைத்திருந்தோம் அதையெல்லாம் நடக்காமல் போய்விட்டது. காவேரி முகத்தில் இனி சந்தோஷத்தை மட்டும் தான் பார்க்கணும் என்று நினைத்தது இவ்ளோ பெரிய தப்பாக போய்விட்டதே என்று பீல் பண்ணுகிறார்.
அப்படி பீல் பண்ணும் பொழுது உடனே எதுக்கும் தயங்க கூடாது என்பதற்காக காவேரிடம் போன் பண்ணி பேசலாம் என காவேரிக்கு போன் பண்ணுகிறார். அப்பொழுது நர்மதா, விஜய் மாமா போன் பண்ணுகிறார் என்று சொன்னதும் சாரதா இன்னும் அவர் எதற்கு கால் பண்ணுகிறார் என்று காவிரியைத் திட்ட ஆரம்பித்து விட்டார். ஆனாலும் காவேரி, யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தன் மீது தான் தவறு இருக்கிறது, என்ன சொல்ல வேண்டும் என்றாலும் என்னை சொல்லிக் கொள்ளுங்கள் என சொல்கிறார்.
அது மட்டும் இல்லாமல் கங்காவிடம் யமுனா, விஜயை பற்றி ரொம்பவே தரக்குறைவாக பேசுகிறார். அது மட்டும் இல்லாமல் நவீன் தான் சூப்பர் விஜய் அனைத்தும் பண்ணுவது எல்லாம் நடிப்பு என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது காவிரி அனைத்தையும் கேட்டுவிட்டார். உடனே யமுனாவின் கொட்டத்தை அடக்கும் விதமாக காவிரி நல்லா நாலு கேள்வி கேட்டு விட்டார்.
விஜய் பற்றி யார் என்ன சொன்னாலும் உனக்கு சொல்ல தகுதியே கிடையாது. நீ கண்கலங்கி நின்ற பொழுது உன்னுடைய காதலை சேர்த்து வைக்கும் விதமாக விஜய் செய்த விஷயங்கள் அனைத்தையும் மறந்து விட்டாயா? நீ நவீனுக்கு எப்படி நாளும் கோயில் கட்டி கும்பிடு, ஆனால் அதற்காக விஜய் பற்றி ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன். நீ கல்யாணம் பண்ணது என்ன பெரிய விஷயம் பிளாக்மெயில் பண்ணி தானே கல்யாணம் பண்ணினாய்?
அதெல்லாம் மறந்துட்டு இப்போ ஒப்பந்த கல்யாணம் பண்ணதை பற்றி வாய் கிழிய பேசுறியா? விஜய் பண்ணது ஒரு தவறு தான் அதை என்ன பண்ணனும் எப்படி பண்ணனும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்னுடைய விஷயத்தில் நீ இனிமேல் தலையிடாதே, ஒரு வருஷமாக நான் அவர் கூட வாழ்ந்திருக்கிறேன், எனக்கு அவரைப் பற்றி தெரியும். அதனால் எங்களுடைய பிரச்சனையில் நீ குளிர் காய வேண்டாம் என்று லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார்.
இதையெல்லாம் பார்த்த கங்கா, காவிரிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக உன்னுடைய கோபம் எனக்கு புரிகிறது. யாரு என்ன சொன்னாலும் நீ அவருடன் ஒரு வருஷம் வாழ்ந்திருக்கிறாய். அந்த நேரத்தில் அவரைப் பற்றி சொன்ன விஷயங்கள் மூலம் நான் புரிந்து கொண்டது உன் மனதில் அவருடைய ஞாபகங்கள் நன்றாகவே இருக்கிறது. அதனால் அவருக்கும் உன்னை விட்டு பிரிய மனசு இல்லை என்பது தெரிகிறது. இந்த மாதிரி குழப்பமான ஒரு சூழ்நிலையில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாது.
அதனால் இதுவும் கடந்து போகும் கூடிய சீக்கிரத்தில் எல்லாம் மாறிவிடும் என்று ஆறுதல் படுத்தி விடுகிறார். அடுத்ததாக குமரன் வாடகைக்கு வீடு பார்த்த ஓனரிடம் பேசி இரண்டு நாளுக்குள் வந்து விடுவதாக சொல்லிட்டு வருகிறார். அப்படி குமரன் வரும் வழியில் விஜய் அவரை மரித்து காவிரி எங்கே போயிருக்கிறார் என்று எனக்கு தெரிய வேண்டும். காவிரியைப் பார்த்து பேசினால் எல்லா பிரச்சினையும் சரியாகிவிடும். அதற்கு நீங்கள் தான் எனக்கு உதவி பண்ண வேண்டும் என்று கெஞ்சுகிறார்.
உடனே குமரன், எங்க மாமாவுக்கு நான்கு பெண்கள் இருந்தாலும் நாங்கள் அவர்களை ஒரு குலசாமியாக பார்த்து வந்தோம். என் மாமாவுக்கு பிறகு இந்த குடும்பத்தை எந்த விதத்திலும் நான் கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் தற்போது காவிரி இந்த ஒரு நிலைமையில் இருப்பதற்கு நானும் ஒரு காரணம் என்று நினைக்கும் போது குற்ற உணர்ச்சியால் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
நான் அஜாக்கிரதையால் தொலைத்த பணத்தின் காரணமாக தான் சூழ்நிலை பயன்படுத்தி நீ ஒப்பந்தத்தின் படி காவிரியை கல்யாணம் பண்ணி இருக்கிறாய். உனக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா என்று திட்டி விடுகிறார். ஆனாலும் விஜய், மனைவி மீது அளவுக்கு அதிகமான பாசத்தை வைத்ததால் ஆசை மனைவியை தேடி அலையும் விதமாக நொந்து போய் இருக்கிறார்.