வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

குமரவேலுவை ஆட்டிப்படைக்கும் அரசி, காதலில் சிக்கிய பாண்டியனின் மகள்.. வில்லியாக வரும் பழனிவேலுவின் மனைவி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஒற்றுமையாக இருக்கும் பாண்டியன் குடும்பத்தில் இனி தொடர்ந்து சிக்கல்களும் பிரச்சனைகளும் வரப்போகிறது. அதற்கு அஸ்திவாரமாக குமரவேலு ஏற்கனவே அரசிக்கு வலை விரித்துவிட்டார். அந்த வலையில் சிக்கிக் கொள்ளும் அளவிற்கு அரசியும் குமரவேலுவிடம் காதல் வலையில் விழுந்து விட்டார்.

அதாவது பாண்டியன் ஏற்பாடு பண்ணின பெண்ணை பழனிவேலு கல்யாணம் பண்ணக்கூடாது என்று சதி பண்ணி சக்திவேல் மற்றும் முத்துவேல் தடுத்து நிறுத்தி விட்டார்கள். அத்துடன் அவர்கள் கூட்டிட்டு வந்த சுகன்யாவை பழனிவேலுவுக்கு கல்யாணம் பண்ணி வைத்து விட்டார்கள். மேலும் பாண்டியன் குடும்பத்தை அவமானப்படுத்தும் விதமாக ஒரு ஓரமாக நிற்க வைத்து பழனிவேலுவின் கல்யாணம் நடந்து முடிந்து விட்டது.

ஆசிர்வாதம் எதுவும் பண்ண முடியாத அளவிற்கு பாண்டியன் மண்டபத்தில் அசிங்கப்பட்டு வெளியேறி விட்டார். இருந்தாலும் வீட்டு வாசலுக்கு வந்து நின்ற பிறகு மொத்த குடும்பமும் கோபத்துடன் பேசி கொள்கிறார்கள். அப்பொழுது பழனிவேல் மற்றும் சுகன்யா வருவார்கள் அவர்களை மறுபடியும் நன்றாக பார்த்துக் கொள்ளலாம் என்று அனைவரும் வாசியில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் பழனிவேலுவின் இரண்டு அண்ணிகள் மற்றும் குமரவேலு வந்து விடுகிறார்கள். அப்பொழுது கோமதி, என் புருஷனை அசிங்கப்படுத்தனும் நெனச்சு நீங்க எல்லாம் நல்லா செய்து விட்டீர்கள் என்று கோபத்தை வெளிக்காட்டி பேசுகிறார். அப்பொழுது அண்ணிகள் நாங்கள் எதுவும் பண்ணவில்லை, எங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்கிறார்.

உடனே குமரவேலு, பாண்டியன் குடும்பத்திடம் சண்டை போட ஆரம்பித்து விட்டார். ஆனால் அரசி அங்கு நின்று வேண்டாம் என்று கண் அசைத்ததால் குமரவேலு அப்படியே அடங்கி விட்டார். உண்மையாக காதலிக்கவில்லை என்றாலும் கல்யாணம் பண்ணும் வரை கொஞ்சம் அடக்கி வாசிக்கணும் என்பதற்கு ஏற்ப குமரவேலு, பாண்டியன் குடும்பத்திற்கு ஏற்ற மாதிரி சப்போர்ட் பண்ண ஆரம்பித்து விட்டார்.

பிறகு அங்கே சக்திவேல் மற்றும் முத்துவேல் வந்த நிலையில் சக்திவேல் மறுபடியும் பாண்டியனை அசிங்கப்படுத்தி பேசுகிறார். இதை பார்த்ததும் குமரவேலுமிடம் அரசி கொஞ்சம் உங்க அப்பாவை அமைதியாக இருக்க சொல்லு என்று சொல்லிய நிலையில் குமரவேலு சரி விடுங்க இதை பற்றி இனிமேல் பேச வேண்டாம் என்று சொல்லி சுமூகமாக பேசி முடிக்கிறார்.

மகன் எதற்காக சொல்கிறான் என்று புரிந்து கொண்ட சக்திவேலும் சரி என்று அமைதியாகிவிட்டார். தற்போது குமரவேலுவை தன்னுடைய கண்ட்ரோலில் வைத்து ஆட்டிப்படைக்கும் அரிசி காதலில் விழுந்த பிறகு கல்யாணத்தில் சிக்கிக்கொண்டு குமரவேலுமிடம் மாட்டிக் கொள்ளப் போகிறார். இதனை தொடர்ந்து பழனிவேலு கட்டின பொண்டாட்டியை கூட்டிட்டு எப்படியும் பாண்டியன் வீட்டிற்குள் வந்துவிடுவார்.

ஆனாலும் பழனிவேலுவின் மனைவி மூலம் ஒற்றுமையாக இருக்கும் பாண்டியன் குடும்பத்தில் பிரச்சனை பண்ணி ஒவ்வொருவரையும் பிரித்துக் காட்டப் போகிறார். இதுதான் சக்திவேலுவின் அடுத்த கட்ட ப்ளான் ஆக இருக்கப்போகிறது.

Trending News