வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

சுந்தர் சியை கரை சேரவிடாமல் குட்டையை குழப்பம் நயன்தாரா, விஷால்.. ரைட்டு போட்ட பலே ஸ்கெட்ச்

அடுத்து எந்த ப்ராஜெக்ட்டை பண்ணுவது என்று புலம்பி கொண்டிருந்தார் சுந்தர் சியை மேற்கொண்டு குழப்பும் விதமாக நயன்தாரா மற்றும் விஷால் இருவரும் குட்டையை குழப்பி வருகிறார்கள். மதகஜராஜா படம் அடித்த சூப்பர் ஹிட்டால் அடுத்து இதே காம்பினேஷனில் படம் பண்ணலாம்னு யோசித்துக் கொண்டிருந்தார்.

விஷாலை வைத்து ஆம்பள இரண்டாம் பாகம் எடுக்கலாம் என திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் சுந்தர் சி. ஆனால் விஷால் அடுத்து நடிக்கும் படங்களுக்கு சம்பளம் கேட்காமல் லாபத்தில் பங்கு கேட்கிறார். இதனால் தயாரிப்பாளர்கள் சற்று யோசிக்கிறார்கள். அதனால் அடுத்த ப்ராஜெக்ட் நகராமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறது.

இது ஒரு பக்கம் போய்க் போய்க் கொண்டிருக்கும் போது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் படத்தை எடுக்க வேல்ஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சுந்தர் சி இடம் மல்லுக்கட்டி வருகிறார். ஆனால் அந்தப் படத்திற்கு நயன்தாரா கால் சீட் கொடுக்காமல் இழுத்து அடித்து வருகிறார்.

சரி நயன்தாரா கால் சீட் தான் கிடைக்கவில்லை, விஷாலை வைத்து ஆம்பள 2 படத்தை இயக்கலாம் என்று யோசிக்கையில் மீண்டும் நயன்தாரா குட்டையை குழப்புகிறார். ஏப்ரல் 10 படம் ஆரம்பிக்கலாம் என கூறி வருகிறார். இப்படி சுந்தர் சியை இருவரும் சுற்றலில் விடுகிறார்கள்.

இப்பொழுது சுந்தர் சி விஷால் படத்தை நிறுத்திவிட்டு மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை எடுக்க போகிறாராம். இதற்கு நான்கு மாதங்கள் அவகாசம் கேட்டிருக்கிறார். அதற்குள் நயன்தாரா முழுவதுமாக தன்னுடைய போர்ஷனை முடித்துவிட்டு தான் செல்ல வேண்டும் என தயாரிப்பாளர் ஐசரி கணேசிடம் ஆர்டர் போட்டிருக்கிறார் சுந்தர் சி.

Trending News