Ilaiyaraja: இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணி கடந்த வருடம் புற்றுநோய் காரணமாக உயிர் நீத்தார். அவருடைய இழப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வை ஏற்படுத்தியது.
தற்போது அவர் இறந்து ஓராண்டு முடிந்திருக்கும் நிலையில் நேற்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இளையராஜா உட்பட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது பவதாரிணியின் பாடல்களின் கச்சேரி நடைபெற்றது. அதை தொடர்ந்து மேடையில் பேசிய இளையராஜா கண்கலங்கி உருக்கத்தோடு தன் மகளின் கடைசி ஆசை பற்றி தெரிவித்தார்.
கண்கலங்கி எமோஷனலாக பேசிய இளையராஜா
பவதாரிணி பாப்பாவின் பிறந்தநாள் இன்று அதே நாளில் அவருடைய திதியும் வந்திருக்கிறது. இதிலிருந்து அவருடைய ஆத்மா சாந்தி அடைந்திருக்கிறது என்பது தெரிகிறது.
பவதாரிணிக்கு சிறுமிகளுக்கான ஆர்கெஸ்ட்ரா குழு உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.
15 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகள் அனைவரும் இந்த குழுவில் சேரலாம். அவர்களுக்கான நேர்முகத் தேர்வை நாங்கள் நடத்துவோம்.
உலகெங்கிலும் உள்ள சிறுமிகள் எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். இதன் மூலம் இசை உலகெங்கும் பரவும் என எமோஷனலாக இசைஞானி பேசினார்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு, கார்த்திக் ராஜா, கங்கை அமரன் உள்ளிட்டோரும் பவதாரணியின் நிகழ்வுகளை மிகவும் உருக்கத்தோடு பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.