Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரனின் ஆணவத்திற்கு வீட்டிற்கு வந்த நான்கு பெண்களும் சேர்ந்து கொடுத்த பதிலடியாக ஜெயிலுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். ஆனால் போகும்போது குணசேகரன் சொன்னது என்னவென்றால் இந்த குணசேகரனை நீங்கள் உள்ளே அனுப்பி இருந்தாலும், இனி பார்க்க போகும் ஒவ்வொருவரும் உங்களுக்கு குணசேகராகத் தான் இருப்பார் என்று சொல்லி இருந்தார்.
அதன்படி சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் பெண்களின் லட்சியத்தில் தொடர்ந்து ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி சொந்த காலில் நிற்க வேண்டும் என்று போராடும் பெண்களுக்கு மறைமுகமாக கதிர் ஆப்பு வைத்து வருகிறார். அந்த வகையில் ஞானமே இல்லாத மங்குனி அமைச்சராக இருந்து வரும் ஞானத்தை பகடகாயாக பயன்படுத்தி விட்டார்.
அதனால் ஞானம் ஆணாதிக்கத் திமிரை காட்டும் வகையில் ரேணுகாவிடம் அராஜகம் பண்ண ஆரம்பித்து விட்டார். ரேணுகாவை பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று சொல்லி இருந்த நிலையில் ரேணுகா ஞானத்தை பெருசாக எடுத்துக் கொள்ளாமல் ஐஸ்வர்யாவை கூட்டிட்டு பரதநாட்டிய பள்ளிக்கூடத்திற்கு போனார். இது எல்லாம் தெரிந்த விசாலாட்சி வீட்டில் ஓவராக ஆர்ப்பாட்டம் பண்ணிய நிலையில் ஞானம் ரொம்பவே கொந்தளித்து போய்விட்டார்.
உடனே ரேணுகாவின் கை காலை உடைத்து வீட்டில் அடக்கி விடுகிறேன் என்று சொல்லி ஞானம் பரதநாட்டியம் பள்ளிக்கூடத்திற்கு சென்று நாதமணியிடம் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு ரேணுகாவை வலுக்கட்டாயமாக அவமானப்படுத்தும் அளவிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார். வீட்டிற்கு வந்ததும் பொண்டாட்டியை கண்ட்ரோல் பண்ண வேண்டும் என்ற நினைப்பில் ஓவராக அராஜகம் பண்ணி அடிமைப்படுத்த நினைக்கிறார்.
இன்னொரு பக்கம் கதிர், ஞானத்தை தன் பக்கம் வைத்து எல்லா காரியத்தையும் சாதிக்க வேண்டும் என்று போட்ட ஸ்கெச்சில் ஒரு டிக்கெட்டை அவுட் ஆகிவிட்டார். ஏற்கனவே கதிர் என்ன சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற நினைப்பில் ஆதிரை, தர்ஷன், தாரா, விசாலாட்சி இவர்கள் அனைவரும் கதிருக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். தற்போது இந்த லிஸ்டில் ஞானமும் சேர்ந்து கொண்டார்.
இப்படியே ஒவ்வொரு டிக்கெட்யும் அடுத்தடுத்து கவுக்க போகிறார். கடைசியில் மொத்தமாக குணசேகரனை ஏமாற்றி வீட்டில் இருப்பவர்களையும் ஏமாற்றி அனைத்து சொத்துக்களையும் ஆட்டைய போட போகிறார். இது தெரியாத குணசேகரன், கதிரை கண்மூடித்தனமாக நம்பி ஏமாறப் போகிறார். இன்னொரு பக்கம் ஆபீஸ் வேலையில் சேர்ந்திருக்கும் ஈஸ்வரிக்கு புதுசாக பிரச்சனைகள் வர ஆரம்பித்துவிட்டது.
இதையெல்லாம் சமாளித்து அந்த வேலையை தக்க வைத்துக் கொள்வதற்கு ஈஸ்வரி ஒவ்வொரு நாளும் போராட போகிறார். அடுத்ததாக நந்தினி மசாலா ஆர்டரை எடுத்துக் கொண்டதால் அதை சக்சஸ் ஆக முடிக்க வேண்டும் என்பதற்காக கடையை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார். ஆனால் இதற்கும் ஆப்பு வைக்கும் விதமாக கதிர் மறைமுகமாக தடுக்க போகிறார். இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி ரேணுகா ஈஸ்வரி நந்தினி மற்றும் ஜனனி அனைவரும் எப்படி வெற்றி பெறப் போகிறார்கள் என்பதுதான் ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக இருக்கப் போகிறது.