நளினியை பார்த்து கதறி அழுத டி ராஜேந்தர்.. இப்படியும் கூட நடக்குமா?

Nalini: நடிகை நளினி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

1980களில் சினிமாவுக்கு வந்த நளினிக்கு 82 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான உயிருள்ளவரை உஷா படம் பெரிய வெற்றியாக அமைந்தது.

அதன் பின்னர் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த நளினி ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நளினிக்கு ஏற்கனவே சினிமா அறவே பிடிக்காதாம்.

கதறி அழுத டி ராஜேந்தர்

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க வேண்டாம் என்பதே அவருக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்ததாம்.

ஆனால் காலம் ராமராஜனை விவாகரத்து செய்த பிறகு நளினியை மீண்டும் சினிமாவில் கொண்டு வந்து சேர்த்தது.

ராமராஜன் உடனான விவாகரத்திற்கு பிறகு நளினி மீண்டும் டி ராஜேந்தர் இயக்கத்தில் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்தார்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பில் நளினியை பார்த்ததும் டி ராஜேந்தர் அழுதுவிட்டாராம். என்னுடைய உயிருள்ளவரை உஷா ஹீரோயினிக்கா இந்த நிலைமை என்று சொல்லி அழுதாராம்.

நளினி இந்த விஷயத்தை தான் போட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் ஜாதகத்தை நம்பி ராமராஜன் தன்னை விவாகரத்து செய்து விட்டதாக அவர் சொன்ன விஷயம் இப்படியும் கூட நடக்குமா என்று இருந்தது.

Leave a Comment