இந்த படத்திற்கு இதுதான் முடிவு என்பது சில படங்களின் இடைவேளைக்கு பின்னரே நம்மால் கணித்து விட முடியும். ஆனால் கடைசி நேரத்தில் சரியான திருப்பமுனையாக யாரும் எதிர்பார்க்காமல் பட்டையை கிளப்பிய படங்களும் இங்கே உண்டு. அதற்கு உதாரணமாக மௌனம் பேசியதே படத்தின் இறுதி கட்டத்தில் லைலா வரும் காட்சியை சொல்லலாம். அப்படி எதிர்பார்க்கப்படாத இறுதி கட்டத்தைக் கொண்ட 5 படங்கள்
இயற்கை: கடைசி நேரம் வரை இந்த படத்தின் கிளைமேக்ஸ்சை யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இந்த படத்தை இயக்கியவர் எஸ்பி ஜனநாதன். தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டிச் சென்றார். படத்தை பார்த்த அனைவரும் வருத்தப்படுவதா, சந்தோஷப்படுவாரா என குழம்பிக் கொண்டுதான் வெளியில் வருவார்கள்.
பொம்மலாட்டம்: இப்படியும் படம் எடுக்கலாம் என பாரதிராஜா செதுக்கிய படம் இது. இந்த படத்திலும் கடைசி வரை கிளைமாக்ஸ் காட்சியை யூகிக்கவே முடியாது. ஒரு ஆணை, பெண்ணாக மாற்றி அவரை அந்த படத்தில் ஹீரோயினாகவும் காட்டி சஸ்பென்ஸ் திரில்லராக இயக்கியிருப்பார் பாரதிராஜா.
சிநேகிதியே: விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்து ரசிகர்களை சீட்டின் நுனிவரை அமர வைத்த படம் சினேகிதியே. கடைசிவரை கதையை சுற்றலில் விட்டு அசத்தியிருப்பார் இயக்குனர் பிரியதர்ஷன். இவர் தமிழில் எடுத்தது மூன்றே படங்கள் தான். கோபுர வாசலிலே. சிநேகிதியே, லேசா லேசா.
பீட்சா: விஜய் சேதுபதியை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது இந்த படம் தான். கடைசி வரை யூகிக்க முடியாத திரைகதையைக் கொண்டது பீட்சா படம். ஆடியன்ஸை மிரட்டி ஒட்டுமொத்தமாக கைத்தட்டளை பெற்றார் கார்த்திக் சுப்புராஜ்.
மங்காத்தா: அஜித்துக்கு சரியான திருப்புமுனை கொடுத்த படம். 2011ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கினார். பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து அஜித் மற்றும் வெங்கட் பிரபு இருவரையும் இந்த படம் வேறு இடத்துக்கு கொண்டு சென்றது. கடைசியில் கிளைமாக்ஸில் இருக்கும் திருப்புமுனை யாராலயும் யோசிக்க முடியாத ஒன்று.