புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வந்த உண்மை.. அரசி மூலம் அடுத்த ஆப்பை வைக்கப் போகும் சக்திவேல்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக பழனிவேலுவின் கல்யாணத்தை சதி பண்ணி முத்துவேல் மற்றும் சக்திவேல் நிறுத்திவிட்டார்கள். அத்துடன் அவர்கள் பார்த்த பெண்ணை தான் பழனிவேலு கல்யாணம் பண்ண வேண்டும் என்ற நினைப்பில் பாண்டியன் பார்த்த பெண்ணை வீட்டிற்கு சென்று தவறாக சொல்லி விட்டார்கள்.

இதனால் முத்துவேல் மற்றும் சக்திவேல் நினைத்தபடி பழனிவேலுவின் கல்யாணம் நடந்து முடிந்து விட்டது. அத்துடன் அந்த மண்டபத்தில் பாண்டியனுக்கும் அவமரியாதை ஏற்பட்டு விட்டது. இதனால் கடுப்பான பாண்டியன் வீட்டிற்கு வந்ததும் எதனால் நாம் பார்த்த பொண்ணு வீட்டில் உள்ளவங்க ஏன் வேண்டாம் என்று போனாங்க என்ற காரணம் எனக்கு தெரிந்தாக வேண்டும்.

நான் போய் விசாரித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி பாண்டியன் கிளம்புகிறார். அப்பொழுது செந்தில் நீங்க போக வேண்டாம் நாங்க போகிறோம் என்று சொல்லி கதிரை கூட்டிட்டு கிளம்பி விடுகிறார். பிறகு கதிர் மற்றும் செந்தில் பொண்ணு வீட்டிற்கு போய் விசாரிக்கிறார்கள். அப்பொழுது சக்திவேல் மற்றும் முத்துவேல் வீட்டிற்கு வந்து பழனிவேலுக்கு கல்யாணம் பண்ணினாலும் பிரயோஜனம் இல்லை.

அவருக்கு கல்யாணமே பண்ண கூடாது என்று டாக்டர் சொன்னதாக சொல்லி விடுகிறார். இதை கேட்டு ஆத்திரமடைந்த செந்தில் மற்றும் கதிர் வீட்டிற்கு வந்ததும் குடும்பத்தில் இருப்பவர்கள் முன் சொல்லி விடுகிறார். உடனே கோமதி நான் போய் நியாயம் கேட்டுட்டு வருகிறேன் என்று சொல்லி அனைவரும் கிளம்புகிறார்கள். ஆனால் பாண்டியன் இப்போதைக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று சொல்லி தடுத்து விடுகிறார்.

அடுத்ததாக சக்திவேல் மற்றும் முத்துவேல், பழனிவேலுவிடம் ஆசை வார்த்தை காட்டும் விதமாக உனக்கு சொந்தமாக ஒரு கடை வைத்துக் கொடுக்கிறோம். அதை நீ பார்த்துக்கொண்டு சந்தோசமாக இரு என்று சொல்கிறார்கள். ஆனால் பழனிவேலு எதுவும் சொல்லாமல் போய்விடுகிறார். பிறகு இப்படியே போனால் அவனே சரியாகி விடுவான் என்று சொல்லி நக்கலாக சிரித்து பேசிக்கொள்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பழனிவேலுவுக்கு நடந்த கல்யாணம் ஒரு அநியாயமாகத் தான் தெரிகிறது. அதிலும் பழனிவேலுவின் குணத்துக்கு எதிர்மறையாக வந்திருக்கும் சுகன்யா ஒரு சைக்கோவாகவும் நெகட்டிவ் கேரட்ரால் மொத்த குடும்பத்தையும் ஆட்டிப்படைப்பது போல் தெரிகிறது. இதனை தொடர்ந்து அடுத்து பாண்டியனுக்கு வைக்க போகும் ஆப்பு என்னவென்றால் அரசியை குமரவேலுக்கு கட்டி வைத்து பாண்டியன் குடும்பத்தை ஆட்டிப்படைக்க போகிறார்.

Trending News