Ajith Kumar: என்னதான் வெளி உலகத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என அஜித் காட்டிக் கொண்டாலும் நாட்டு நடப்புகளை அப்டேட்டில் வைத்திருக்கிறார் போல.
அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்று நிறைய விமர்சனங்களும் எழுந்தது.
மேலும் நேற்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு மத்திய அமைச்சரகம் Y பிரிவு பாதுகாப்பு அளிக்க இருப்பதாக அறிவித்தது.
ஆளுநருக்கு நோ சொன்ன அஜித்குமார்
இதுவும் அரசியல் உள்நோக்கம் தான், விஜயை பாஜக கட்சிக்கு இழுக்கத்தான் இப்படி செய்கிறார்கள் என நேற்றிலிருந்து அக்கப்போராக இருக்கிறது.
இந்த நிலையில் தான் பத்மபூஷன் விருது வாங்குபவர்களுக்கு தமிழக ஆளுநர் ரவி பாராட்டு விழா இன்று நடத்துகிறார். இதற்கு நடிகர் அஜித்குமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் மீண்டும் இந்த அரசியல் சூழ்ச்சியில் சிக்கும் நிலையில் அஜித் இல்லை போல.
அதனால் ஆட்சி இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என அவருடைய மேனேஜர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டான்.
அஜித் கார் ரேஸ் பந்தயத்திற்காக வெளிநாட்டில் இருப்பது கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.