மஞ்சுமா மோகன் பற்றி கிடைத்த புது தகவல்.. ரக்குடான பெண்ணாக மாறிய மிஸ்ஸஸ் கௌதம் கார்த்திக்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மஞ்சுமா மோகன். அதன் பின் சத்திரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் என பல படங்கள் நடித்து தள்ளினாலும் எந்த படமும் கைகொடுக்கவில்லை.

இதில் தேவராட்டம் படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கின் வாரிசு கௌதம் கார்த்திக் உடன் ஜோடி போட்டார். இந்த படத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது அதன் பின் கார்த்திக் வீட்டு மருமகளாகவும் மாறினார் மஞ்சுமா மோகன். கல்யாணத்திற்கு பிறகு படத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

இடையில் கொஞ்சம் ஓவர் வெய்ட்டும் போட்டுவிட்டார். இனிமேல் அவரது சினிமா கேரியர் அவ்வளவுதான் என்ற பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் அதை எல்லாம் தவிடு பொடியாக்கி இப்பொழுது மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார். பார்ப்பதற்கு ஆளும் பழையபடி ஸ்லிம்மாக மாறி ஹீரோயின்களுக்கு டப் கொடுத்து வருகிறார்.

யாருக்கும் தெரியாமல் தீவிரமாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் மஞ்சுமா மோகன். இவன் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு பெப் தொடர்கள் வெளிவர இருக்கிறது. இதில் பிப்ரவரி 28ஆம் தேதி வெப் தொடராகிய சூழல் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் பாகம் செம ஹிட் அடித்து இருந்தது.

சுழல் வெப் தொடரின் இரண்டாம் பாகத்தில் மஞ்சிமா மோகன் கதாபாத்திரத்தை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். இவரை வைத்து தான் அந்த தொடர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகருமாம். இது போக ஜம்ஜம் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்த படமும் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் எஃப் ஐ ஆர்.

Leave a Comment