உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் தான் தன்னுடைய கடைசி படம் என முடிவு எடுத்து சினிமாவில் இருந்து விலகியும் விட்டார். துணை முதல்வராக அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு ஓ எஸ் டி என்ற தயாரிப்பு நிறுவனம் இவரை வைத்து ஒரு படத்தை தயாரித்துள்ளது. உதயநிதி ஹீரோவாகவும், கயல் ஆனந்தி, யோகி பாபு போன்றவர்கள் நடிப்பில் உருவான அந்தப் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு தான் தற்போது தீர்ப்பு கிடைத்துள்ளது.
கே எஸ் அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் என்ற படத்தை தயாரிப்பதற்கு ஓஎஸ்டி நிறுவனம் களத்தில் இறங்கியது. இந்த படத்தில் தான் உதயநிதி கமிட்டாகி நடித்து வந்தார். இதில் 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் மீதம் 20% மட்டுமே இருப்பதாகவும் தயாரிப்பாளர் கூறி வந்தார். ஆனால் மாமன்னன் படத்தோடு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் உதயநிதி.
ஏஞ்சல் படப்பிடிப்பிற்கு கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் செலவழிந்து விட்டதாகவும். பேசியபடி மீதம் எட்டு நாட்கள் கால் சீட் கொடுத்து விட்டால் படத்தை முடித்து விடலாம் அல்லது இந்த படத்திற்கு நஷ்ட ஈடாக 25 கோடி ரூபாய் வேண்டும் எனவும் அந்த தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
உதயநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த படத்திற்கு இப்பொழுது வழக்கு தொடர்ந்தது நியாயமற்றது என வாதாடியுள்ளார். படத்தை முடித்துக் கொடுக்காததால் தயாரிப்பாளர் பரப்பிற்கு எந்த ஒரு இழப்பும் இல்லை எனவும், இது காலதாமதமான மனு தாக்கல் எனவும் நீதிபதி இந்த வழக்கை நீராகரித்துவிட்டார்