Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், விவாகரத்து வாங்கின கையோடு கோபி வீட்டுக்கு ராதிகா வருகிறார். வந்ததும் தெரிந்தோ தெரியாமலோ நான் உங்களை கஷ்டப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று ஈஸ்வரிடம் மன்னிப்பு கேட்டு விட்டார். அத்துடன் இனி உங்க பிள்ளை விஷயத்தில் நான் குறுக்கே வரமாட்டேன். நிரந்தரமாக நான் அவரை விட்டு பிரிந்து விட்டேன் என்று ஈஸ்வரிடம் சொல்கிறார்.
உடனே ஈஸ்வரியும் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு ஏற்ப ஓவராக டிராமா பண்ணி ராதிகாவை ஆசிர்வாதம் பண்ணி அனுப்பி வைக்கிறார். அந்த வகையில் இனி ராதிகாவின் அத்தியாயம் முடிந்து விட்டது. ஆனாலும் கோபி, ராதிகா தன்னை விட்டு நிரந்தரமாக போய்விட்டாள் என பீல் பண்ணுகிறார். பிறகு வழக்கம் போல் ஈஸ்வரி, கோபிக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்துகிறார்.
அடுத்ததாக கோபி எல்லாத்தையும் விட்டு விட்டு பழைய மாதிரி வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று முயற்சி எடுக்கிறார். மேலும் பாக்கியா புதுசாக ஓபன் பண்ண போகும் இரண்டாவது ஹோட்டல் நிகழ்ச்சியை பற்றி டிஸ்கஸ் பண்ணுகிறார்கள். ஆனாலும் ஒரே வீட்டில் விவாகரத்து வாங்கிட்டு போன கணவர் இருந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் பாக்கிய அமைதியாக இருக்கிறார்.
இதே பாக்கியா தான் ராதிகா மற்றும் மயு இருக்கும் பொழுது கண்டிஷன் போட்டு வாடகை வசூலித்தார். ஆனால் இப்பொழுதெல்லாம் அது தேவைப்படவில்லை. ஏனென்றால் இது கணவர் மட்டும் என்பதால் பாக்யா அமைதியாக இருக்கிறார். அடுத்ததாக இனியா காதலிக்கும் பையனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் ராதிகாவை நான் ரொம்பவே டார்ச்சர் பண்ணி இருக்கிறேன்.
ஆனால் அப்பொழுது எனக்கு அந்த அளவுக்கு விவரம் இல்லை என்பதால் நான் ரொம்பவே கஷ்டப்படுத்தி இருக்கிறேன். இதற்கெல்லாம் எனக்கு மன்னிப்பே கிடையாது என்று சொல்லி ஃபில் பண்ணுகிறார். உடனே அந்த பையனும் இனியாவுக்கு ஆறுதல் சொல்கிறார். அதன் பிறகு நம்முடைய கல்யாணம் நல்லபடியாக நடக்குமா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது.
ஏனென்றால் எங்களுக்கு பணம் வசதி எதுவும் கிடையாது என்று சொல்லிய நிலையில் இனியா எங்க வீட்டில் எந்த பிரச்சனையும் இருக்காது. உன்னுடைய லட்சியம் கலெக்டர் ஆக வேண்டும் என்று தான். அதனால் நீ இப்பொழுது அதில் கவனம் செலுத்தி கலெக்டர் ஆகு என்று சொல்கிறார். இனிய சொன்ன மாதிரி இனியாவின் காதல் வீட்டுக்கு தெரிய வந்தாலும் பாக்கியா இதை நடத்தி வைப்பார்.